Tag: Crime

  • ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் 180 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மன்னார் வாசிகள்

    ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் 180 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மன்னார் வாசிகள்

    மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும்…

  • யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை

    யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை

    யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு…

  • இஷாரா செவ்வந்திக்கு உதவியோர்; யாழில் பலர் கிடுக்கிப்பிடியில்

    இஷாரா செவ்வந்திக்கு உதவியோர்; யாழில் பலர் கிடுக்கிப்பிடியில்

    இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினரே படகினை மீட்டுள்ளதாகவும் , படகின் வெளியிணைப்பு இயந்திரம் மீட்கப்படவில்லை எனவும், படகின் உரிமையாளரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை செவ்வந்தி தொடர்பிலான…

  • இஷாராவை தப்பிக்கவைத்தவரே ஈஸ்டர் கொலையாளிகளையும் தப்பிக்க வைத்தவர்!

    இஷாராவை தப்பிக்கவைத்தவரே ஈஸ்டர் கொலையாளிகளையும் தப்பிக்க வைத்தவர்!

    யாழ்ப்பாணம் – அரியாலையில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏறிய ஆனந்தன் என்ற முக்கிய சந்தேக நபர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களை கடல் வழியாக தப்பிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாகவும் இஷாரா செவ்வந்தியிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சகோதர மொழி ஊடகமொன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட…

  • யாழில் அதிகாலையில் அதிரடிப்படையிடப்பட்ட முற்றுகையிடப்பட்ட வீடு!

    யாழில் அதிகாலையில் அதிரடிப்படையிடப்பட்ட முற்றுகையிடப்பட்ட வீடு!

    யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் குறித்த இளைஞனின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்டது. தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் குறித்த இளைஞன் இல்லாத நிலையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீட்டில் தங்கியிருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ள பொலிஸார் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட…

  • இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

    இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

    இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரின்போது 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரணடைந்தனர். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும் மக்களுடன் மக்களாகச் சரணடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உடை உணவு, மருந்து என்பவற்றை வழங்கி, புனர்வாழ்வில் இருந்து செல்லும் வரை அனைவரையும் முறைப்படி பாதுகாத்தோம். எனினும், இறுதிப்போரின் போது…

  • இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு மற்றும் திறன் இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டிருந்தால், எவ்வளவு சிறந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப முடிந்திருக்கும் என்று வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறினார். குற்றத்திற்குப் பிறகு ஒரு பெண்ணாக அவர் எடுத்த பாதையை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, அவர் ஒரு அறிவுசார் திறன் கொண்ட நபர் என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனது ஆற்றல், அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும்…

  • இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் விடயத்தில் தடுப்புக்காவல் உத்தரவுகள்

    இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் விடயத்தில் தடுப்புக்காவல் உத்தரவுகள்

    இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும்…

  • யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் இஷாரா செவ்வந்தக்கு கடவுச்சீட்டு

    யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் இஷாரா செவ்வந்தக்கு கடவுச்சீட்டு

    கணேமுல்ல சஞ்சீவ கொசை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாள நாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19…

  • முல்லைத்தீவில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரின் மோசமான செயல்

    முல்லைத்தீவில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரின் மோசமான செயல்

    முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் அவர்களுடன் குறித்த வீட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர்…