Tag: Death

  • பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்!

    பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்!

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12 ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு…

  • கனடாவில் பயங்கரம்; பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

    கனடாவில் பயங்கரம்; பாடசாலை துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சந்தேகநபர் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்குள் நேற்று மதியம் புகுந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அவசரகால எச்சரிக்கை…

  • யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

    யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

    யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற இளைஞன்…

  • யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

    யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

    யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி வழியாக இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.எனினும், கட்டளையை மீறி குறித்த வாகனம் மண்டைத்தீவு நோக்கி பயணித்துள்ளது. இதன்போது, மண்டைத்தீவு பகுதியில் கடமையில்…

  • யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

    யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

    வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துகுள்ளாகியுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.…

  • 17 வயது பாடசாலை மாணவி கோடாரியால் தாக்கப்பட்டு கொலை

    17 வயது பாடசாலை மாணவி கோடாரியால் தாக்கப்பட்டு கொலை

    பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கடந்த 17ஆம் திகதி பிரத்தியேக வகுப்பொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடாரியால் அவரது தலையில் தாக்கி பாரிய…

  • இணைய விளையாட்டால் மூன்று சகோதரிகள் உயிரிழப்பு

    இணைய விளையாட்டால் மூன்று சகோதரிகள் உயிரிழப்பு

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ‘பாரத் சிட்டி’ குடியிருப்பு வளாகத்தில், இன்று அதிகாலை 2:15 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரிகள், தங்கள் குடியிருப்பு தொகுதியின் 9 ஆவது மாடியிலிருந்து வரிசையாகக் குதித்துள்ளனர். பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்களும் பெற்றோரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.…

  • யாழ்ப்பாணத்தில் முதியவரின் உயிரை பறித்த ராணுவ வாகனம்

    யாழ்ப்பாணத்தில் முதியவரின் உயிரை பறித்த ராணுவ வாகனம்

    யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்க வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • யாழில் மகள் மூட்டிய நெருப்பில் தாய் பலி

    யாழில் மகள் மூட்டிய நெருப்பில் தாய் பலி

    யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில்…

  • மட்டக்களப்பில் துயரம்; மின் வேலியால் பறிபோன உயிர்கள்

    மட்டக்களப்பில் துயரம்; மின் வேலியால் பறிபோன உயிர்கள்

    மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் வியாழக்கிழமை (29) காலை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துர்யரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது 48) மற்றும் ஏறாவூர் 5ம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது 43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். தமிழ்ச்செல்வி செல்வகுமார் மற்றும் உயிரிழந்தவரின் மனைவியான…