Tag: Death

  • மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பலி

    மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 11 பேர் பலி

    மேற்கு வங்க மாநிலத்தின், மால்டா மாவட்டத்தில் நேற்றைய தினம் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். பருவ மழை தொடங்கியுள்ள நிலையிலேயே இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மின்னல் தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

  • யாழில் குடும்ப பெண் கழுத்து நெரித்து கொலை; கணவர் கைது

    யாழில்  குடும்ப பெண் கழுத்து நெரித்து கொலை; கணவர்  கைது

    யாழ்ப்பாணம் – தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின்…

  • யாழில் நித்திரைக்கு சென்ற இளம் தாய் சடலமாக மீட்பு!

    யாழில் நித்திரைக்கு சென்ற இளம் தாய் சடலமாக  மீட்பு!

    யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியைச் சேர்ந்த ஜென்சியா சிவசூரியன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இவர் புதன்கிழமை இரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றார். பின்னர் வியாழக்கிழமை காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது…

  • தந்தை பிரித்தானியாவில் ….யாழ்ப்பாண மாணவி விபரீத முடிவு!

    தந்தை பிரித்தானியாவில் ….யாழ்ப்பாண மாணவி விபரீத முடிவு!

    யாழ்ப்பாணத்தில் , நீர்கொழும்பு பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி வியாபாரிமூலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவில் தந்தை வசித்து வரும் நிலையில் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பரீட்சை முடிந்த மாணவி, யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் அதிகநேரம் தொலைபேசி உரையாடுவதை தாயார் கண்டித்ததால் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை…

  • விளம்பர பலகை இடிந்து விழுந்து 14 பேர் பலி; மும்பையில் சோகம்

    விளம்பர பலகை இடிந்து விழுந்து 14 பேர் பலி; மும்பையில் சோகம்

    மும்பை நகரில் பெரிய விளம்பர பலகை சரிந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை நகரின் ஊடாக வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர பலகை இடிந்து விழுந்தது. குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த அறிவிப்பு பலகை இடிந்து வீழ்ந்துள்ளதுடன் பல வாகனங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விளம்பரப் பலகை சட்டப்பூர்வ அனுமதியுடன் நிறுவப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர்…