-
தங்காலையில் ஐஸ் போதை பொருளால் உயிரிழந்த நாய்கள்

தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ‘ஐஸ்’ போதைப் பொருட்கள் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்தனர். தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய ஐந்து நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி சுற்றிச் வழமைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.இந்த நாய்களை கொண்டு செல்வதற்கு அரச மிருக…
-
நாய் மீது ஈவிரக்க்மின்றி கொதிநீர் ஊற்றிய நபர்

ஒரு கடையின் முன் தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீர் ஊற்றி விரட்டும் சம்பவம், பொகவந்தலாவை நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு கேமராவில் திங்கட்கிழமை (15) பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை நகரில் சுற்றித் திரிந்த அந்த நாய் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது, கடைக்கு அருகில் பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளர் அந்த நாய் மீது வெந்நீர் ஊற்றியுள்ளார். சூடான நீரில் நனைந்த நாய், வலியால் அலறிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து ஓடிவிட்டதாக அருகிலுள்ள மக்கள்…
-
மாந்திரீகத்திற்காக நாயைக் கொன்ற பெண் என்ஜினீயர்

மாந்திரீகத்திற்காக பெண் என்ஜினீயர் நாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா சின்னப்பா லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் திரிபர்ணா பாயிக்(வயது 36). மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்தார். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் 3 நாய்கள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி திரிபர்ணாவின் வீட்டில்…
-
நாய்களை வீதிகளில் அழைத்துச் செல்ல தடை போட்ட நாடு

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் நாய்களை பொது இடங்களில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடை, 2019 இல் தெஹ்ரானில் விதிக்கப்பட்ட பொலிஸ் உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, கடந்த வாரத்தில் மேலும் 18 முக்கிய நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் கீழ், நாய்களை வாகனங்களில் பயணிக்கச் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. 1979 இல் ஆட்சிக்கு வந்த ஈரானிய புரட்சிகர அரசாங்கம், நாய் வளர்ப்பை கண்டித்துள்ள நிலையில், மேலும் நாய்கள் அசுத்தமானதாக…
-
மாங்குளத்தில் கொடூரம்; நாயை தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்

மாங்குளத்தில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை அழைத்து சென்று தூக்கிலிட்டு படுகொலை செய்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாங்குளம் மதகு வைத்த குளம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் ஆடுகளை வளர்த்து வருகின்றார். அவரது ஆடொன்றினை அயல் வீட்டாரின் வளர்ப்பு நாய் கடித்ததில் , ஆடு காயமடைந்த…
-
53 கிலோ நாய் உயிரிழப்பு; உரிமையாளருக்கு சிறைதண்டனை

நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது. நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த…
-
யாழ் போதனா வைத்தியசாலையில் 4 வயது சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று (17) சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் நேற்று முன் தினம் (15) மதியம் குறிப்பிட்ட நபர் ஒருவர் மாட்டிறைச்சி துண்டு வாங்கியுள்ளார். ஆனால் அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஏராளமான ரோமங்களுடன் இறைச்சித் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த நபர் உடனடியாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த நிலையிலும் அன்றைய தினம்…
