-
பெண் கைதியால் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனை; பொலிஸார் ஷாக்

கல்கிசை, பிரிவேனா வீதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 பணம் மற்றும் 30 போலி எண் தகடுகளை கல்கிசை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு மின்னணு தராசு, இரண்டு தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க வளையல், ஒரு…
-
போதை பொருள் வாங்க மகளின் நகையை திருடிய தந்தை

போதை பொருள் வாங்குவதற்கு பணம் தேவைக்காக 14 வயது சிறுமியான தனது மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தை அடுத்து தந்தையை கைது செய்து பின்னர் எச்சரித்து விடுவித்த சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் திங்கட்கிழமை (05) அன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை ஆகியுள்ள நிலையில் அதை வாங்குவதற்கு பணம்…
-
நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) 4 கிலோ 800 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த உறுப்பினர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தமிழரசு கட்சியின் நல்லூர் பிரதேசபையின் உறுப்பினர் 4 kg கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மிக நெருங்கிய…
-
யாழ்ப்பாணத்தை அதிரவைத்த போதைப்பொருள் ராணி

யாழில் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களைப் பார்த்தால் யாருக்கும் சந்தேகம் வராது; அந்த அளவிற்கு மிகவும் அப்பாவியாகத் தோற்றமளிப்பார்கள். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் இந்தச் சட்டவிரோதச் செயல்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றனர். பொம்மைவெளி பகுதியில் வாழும் ‘ஜீவிதா’ இவரைப் பற்றிய புகார்கள் இருந்தாலும், உள்ளூர் போலீசாருக்குச் சரியாக மாமூல் கொடுத்து வந்ததால், பொலிஸ் பிடியில் சிக்காமல் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். ஆனால், கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எதிர்பாராத விதமாக CID அதிகாரிகள் ஜீவிதாவைத்…
-
ஆடிய ஆட்டம் எங்கே…. அடங்கும் டக்லஸ் தேவானத்தா!

பாதாள குற்றகுழுவிடம் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிற கைதிகளுடன் சிறைசாலை வாகனத்தில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காணொளி வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பலரின் கொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் பின்னரங்கில் நின்று அரங்கேற்றிய டக்ளஸ் தேவானந்தா, இன்று தானே கைதாகி சிறையில் வாடுகின்றார். அனுர அரசாங்கத்தின் அதிரடியின் முன்னாள் அரச தலைவர்களில் கைக்கூலிகளாக செயல்பட்ட , தமிழ்…
-
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதி

முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (17) மீட்டுள்ளனர். முல்லைத்தீவு – சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ‘மஹேந்திரா கெப்’ ரக வாகனமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேக நபர் தப்பியோடியுள்ள…
-
முல்லைத்தீவில் பெரும் தொகை பணம் ; கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் அதிரடியாக கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மூங்கிலாறு வடக்கில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபா பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
-
இலங்கையில் கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தளித்த காதலன்

வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு தனது காதலியை அழைத்துச் சென்று, ‘ஐஸ்’ என்ற போதைப்பொருளைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி, பின்னர் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஒரு பாரதூரமான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிவேரிய காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. 8 ஆம் திகதி இரவு 10.00…
-
யாழில் ஓட ஓட வெட்டிகொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் வியாபாரியா?

யாழ் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அற்புதாஸ் கடைக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் நேசராசா ரஜீவ் (35) என தெரியவருகின்றது. குறித்த போதைப்பொரு்ள் வியாபாரியின் மனைவியான நதியாவே முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரி எனவும், 3வது புருசனே வெட்டிக் கொலை செய்யப்பட்டவனாவான். இவனும் இவனது மனைவியும் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்தமையை தட்டிக் கேட்ட சிலரை பொலிசாரின் உதவியுடன் இவர்கள் சிறைக்கு அனுப்பியுள்ளார்கள் என தகவல்களை சேகரிக்கச் சென்றவர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். யாழ் கொக்குவில் ரயில் நிலையத்திற்கு…
-
யாழில். வாடகைக்கு அறை எடுத்து மோசமான செயல்; அதிரடியில் சிக்கிய பலர்

யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான இருவர் , போதைப்பொருள் பாவனை காரணமாக வீட்டில் உள்ளவர்களுடன் முரண்பட்டு , வீட்டை விட்டு வெளியேறி நகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றினை பெற்று தங்கியுள்ளனர். அறையில் தங்கியிருந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தமது வருமானத்திற்காகவும் , மேலும்…