Tag: Drugs

  • பொம்மைக்குள் வைத்து போதைப்பொருளை கடத்திய பெண்

    பொம்மைக்குள் வைத்து போதைப்பொருளை கடத்திய பெண்

    பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தனது குழந்தையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் ஒரு மின்னணு தராசு…

  • கொழும்பு விமானநிலையத்தில் கனேடிய பிரஜை கைது

    கொழும்பு விமானநிலையத்தில் கனேடிய பிரஜை கைது

    சுமார் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனேடிய நபர் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த சந்தேக நபர், கனடாவிலிருந்து கத்தாரின் தோஹாவிற்கு பறந்து சென்று, பின்னர் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-662 இல் BIA ஐ வந்தடைந்தார். “கிரீன் சேனல்” வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது விமான நிலைய சுங்க போதைப்பொருள் பிரிவு அவரைப் பிடித்தது, இது அறிவிக்க…

  • யாழில் போதையில் கிண்ற்றில் வீழ்ந்து மரணம்

    யாழில் போதையில் கிண்ற்றில் வீழ்ந்து மரணம்

    யாழில் கசிப்பு அருந்தி விட்டு அதிக மது போதையில் படுத்திருந்தவர் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மானிப்பாய் தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின தந்தையான கணேசராசா சுவாகரன் (வயது 42) என்பவராவார். கடந்த 29 ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிக்கு சென்று சகிப்பு அருந்திவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்கு சென்றபோது வீடு பூட்டி இருந்தால் காரணமாக அவர் அவ்விடத்திலேயே…

  • யாழில் 26 வயது யுவதிக்கு 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு

    யாழில் 26 வயது யுவதிக்கு 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு

    யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 26 வயது யுவதியை 06 மாத காலத்திற்கு புனர்வாழ்வு அளிக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உடைமையில் இருந்து 340 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. கைதான யுவதியிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் போதைப்பொருளை விற்பனை செய்யும் நோக்குடன் தான் உடைமையில் வைத்திருக்கவில்லை எனவும், தனது சொந்த பாவனைக்காகவே வைத்திருப்பதாகவும்…

  • யாழில் போதைக்கு அடிமையானவர் மரணம்

    யாழில் போதைக்கு அடிமையானவர் மரணம்

    யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) அன்று இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கலைச்செல்வன் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் உடல் சுகவீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்ததாகவும் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம்…

  • யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அவசர இலக்கத்திற்கு (119) வந்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற வேளை, இளைஞன் உயிரிழந்த சம்பவத்தில் , உயிரிழந்த இளைஞன் அதீத போதை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது . அந்நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் , மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொலிசாரின் 119 தொலைபேசி இலக்கத்திற்கு நபர் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் அழைப்பினை மேற்கொண்டு , அவசரமாக பொலிசாரின் உதவியை…

  • யாழில் ஊசியால் பறிபோன உயிர்

    யாழில் ஊசியால் பறிபோன உயிர்

    யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக காணப்பட்டார். அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக…

  • கிளிநொச்சியில் சிக்கிய கஞ்சாப் பொதிகள்

    கிளிநொச்சியில் சிக்கிய கஞ்சாப் பொதிகள்

    கிளிநொச்சி, புளியம்பொக்கணைப் பகுதியில் சட்டவிரோதமாக வாகனம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அதனை மறைத்துச் சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். நேற்று புதன்கிழமை பகல் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  • அமெரிக்க பிரஜை கட்டுநாயக்கவில் கைது

    அமெரிக்க பிரஜை கட்டுநாயக்கவில் கைது

    23 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் அமெரிக்க பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (15 ) கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான அமெரிக்க பிரஜை தாய்லாந்திலிருந்து நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான அமெரிக்க பிரஜை கொண்டு…

  • யாழில் அதீத போதை பாவனையால் பறிபோன உயிர்

    யாழில் அதீத போதை பாவனையால் பறிபோன உயிர்

    யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம்செட்டியார் தோட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சுகந்தன் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.