-
யாழில் 197 கிலோ கஞ்சா ; அதிரடி காட்டிய கடற்படை!

யாழ்ப்பாணம் எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா இன்று (03) காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக எழுவைதீவு, அனலைதீவு கடற்பரப்பில் பயணித்த படகு ஒன்றினை சோதனையிட்ட பொழுது 197 கிலோ கிராம் 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. தொடர்ந்து காரைநகர் மற்றும் மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த…
-
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 350 கிலோ கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150…
-
சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிங்கப்பூா் சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத்…
-
போதைப்பொருளுக்கு அடிமையாகிய பொலிஸ் அதிகாரிகளின் வேலைக்கு ஆப்பு

போதைப்பொருளுக்கு அடிமையான 17 பொலிஸ் அதிகாரிகள் தற்போது பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் பாவனத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த அதிகாரிகள் அனைவரும் எதிர்காலத்தில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகாரிகள் அனைவரும் 3 வருட காலத்திற்குள் பொலிஸ் சேவையில் இணைந்த அதிகாரிகள் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள்ளக குழப்பங்கள்; நடவடிக்கைகு தயாராகும் அனுர அரசாங்கம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உள்ளக குழப்பங்கள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அநுர அரசாங்கம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித செயற்பாடுகளுக்கும் இடமளிக்க போவதில்லை. அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதனிடைளே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க ஆரம்பித்;துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் அண்மையில் இடம்பெற்ற…
-
யாழ் பல்கலைக்கழகத்திற்குள் பாலியல் நடத்தை; பீடாதிபதி ரகுராம் ராஜினாமா!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் போதைப்பொருள் மற்றும் மதுபானப் பயன்பாடு மற்றும் ஆபாசமான பாலியல் நடத்தைகளை எதிர்த்த கலைப் பீடத்தின் பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம், நேற்று (26) தனது ராஜினாமா கடிதத்தை நிர்வாக அதிகாரியிடம் சமர்ப்பித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் பல பாலியல் நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை சம்பவங்கள் காரணமாக, சில நாட்களுக்கு முன்பு 9 பல்கலைக்கழக மாணவர்களது வகுப்புகள் தடை செய்யப்பட்டன. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர் கலைப் பீடத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் ஒழுங்கு நடவடிக்கைக்…
-
யாழில் போதை மாத்திரைகளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இளைஞன்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உள்ள மட்டுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு (07-01-2025) இடம்பெற்றுள்ளது. யாழ்.வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞனே, சாவகச்சேரி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுவில் பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன்

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக கூறப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பல்கலைக்கழக மாணவன் வெளிநாடு செல்வதற்காக ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாணவன் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ” லலித் கன்னங்கர ”என்பவருக்குச் சொந்தமான ஐஸ் போதைப்பொருளை ஹங்வெல்ல, கொஸ்கம, பாதுக்க மற்றும்…
-
பளையில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 45 வயதுடைய பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து 23 கிலோ 165 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும்…
-
4 கோடி பெறுமதியான போதைப்பொருள்…வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் கைது!

கஹதுடுவ காவற்துறையினர் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதிகள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் சுமார் 1.5 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine), 835 கிராம் ஹெரோயின் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் மூவரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு சோதனையிட்டதில் அவர்களில் ஒருவரிடமிருந்த 5,140 மில்லிகிராம் ‘ஐஸ்’ கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கைதுகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்…