Tag: Drugs

  • யாழில் சிக்கிய பெரும் தொகை கஞ்சா

    யாழில் சிக்கிய பெரும் தொகை கஞ்சா

    யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரினால் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கைப்பற்ற கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரபப்டுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • பிரபல பாதாள உலக நபர் ‘குடு சலிந்து’வின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் கைது!

    பிரபல பாதாள உலக நபர் ‘குடு சலிந்து’வின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் கைது!

    பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் தலைவருமான சலிந்து மல்ஷித குணரத்னவின் நெருங்கிய சகாக்கள் இருவர் இன்று (09) பாணந்துறை தெற்கு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​பாணந்துறை தெற்கு நல்லுருவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் 400 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் (‘ஐஸ்’) மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும்…

  • பொலிஸாரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த 19 வயது யுவதி

    பொலிஸாரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து  குதித்த 19 வயது யுவதி

    ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து குதித்த போது இரும்பு கம்பிகள் வயிற்றில் குற்றியதில் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாதுக்கை, குருந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து…

  • யாழ் இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

    யாழ் இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

    யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர். குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு…