-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தை பிரசவித்த வௌிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார். இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வதற்காக விமான நிலையத்தின் இடைமாறு பயணிகள் முனையத்தில் (Transit terminal) காத்திருந்துள்ளார். இதன்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக…
-
உலகின் உச்சியில் ஒளிர்ந்த ஒரு கொடி-அமெரிக்கா புர்ஜ் கலிபாவில்!

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் அமைந்துள்ளது. சமீபத்தில், இது ஒரு முக்கிய நிகழ்வின் நேரடி காட்சிக்குத் தளமாக அமைந்தது.இந்த அசத்தலான கட்டிடத்தில் அமெரிக்கக் கொடி ஒளிபரப்பானது என்பது, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். புர்ஜ் கலிபா – உலக அதிசயம் புர்ஜ் கலிபா, 828 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான கட்டிடம் ஆகும். இது துபாயின் அடையாளமாக மட்டுமல்லாமல், கட்டிடக் கலைவல்லமையின் உச்சமாகவும் பார்க்கப்படுகிறது.…
-
அமீரக வாடிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை – பெட்ரோல் விலை களுக்கான எச்சரிக்கை – பெட்ரோல் விலை பெரிய தாக்கம்!

அமீரகம், முழுப் பெயராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates – UAE), மத்திய கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு வளமான மற்றும் வளர்ச்சியடைந்த நாடாகும். இது ஏழு எமிரேடுகளின் கூட்டுச் சங்கமாகும் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்மு அல் கைவைன், ராஸ் அல் கைமா, மற்றும் ஃபுஜைரா. பொருளாதாரம் அமீரகத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவின் உற்பத்தி, ஏற்றுமதி மூலம் உருவானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில், அது பரிமாண…
-
28 மில்லியன் ரூபா பெறுமதியான ஆபரணங்களை கடத்தி வந்த பெண்கள்!

28 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் சவூதியிலிருந்து இலங்கை வந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை (11) இரவு சவூதியின் ஜெத்தாவிலிருந்து டுபாய்க்கு வருகைதந்து அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 35 வயதுடைய இரு பெண்கள் ஆவர். இருவரும் தங்கள் உடலில் 932 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ்கள் மற்றும்…
-
பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியாக இருந்த நடன ஆசிரியை கைது

T 56 துப்பாக்கியுடன் காணாமல் போய் துபாய் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியாக இருந்த நடன ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இரவு விடுதிகளில் நடனமாட வந்தபோது பொலிஸ் கான்ஸ்டபிளை சந்தித்து காதல் கொண்டதாக தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற கான்ஸ்டபிள் தொடர்பாக விசாரணை நடத்தியதில், இந்த நடன ஆசிரியை உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் எந்த நோயும் இல்லை என்று தெரிந்ததும், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர்…
-
டுபாயில் இளம் அரசியல்வாதியின் கணக்கில் பில்லியன் டாலர்; சந்திரிகா போட்டுடைத்த தகவல்!

இளம் அரசியல்வாதி ஒருவரின் மில்லியன் டொலர் கணக்கை தான் பார்த்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். கணக்காளர்களின் 45வது மாநாட்டில் கலந்துகொண்டபோதே துபாயில் அந்த கணக்கு இருந்தமை தெரிந்தது என அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், கணக்கின் அசல் பிரதிகளை சமர்ப்பிக்க முடியாததால், அந்த இளம் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த முடியாது போனது என அவர் மேலும் கூறினார். நல்லாட்சி அரசாங்கத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்று அரசியல்வாதியின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக…
-
முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இருவர் டுபாயில் கைது!

நாட்டில் பல கொலைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பாதாள உலகக் குற்றவாளிகள் துபாயில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான 26 வயதான் கே.திமுத்து சதுரங்க, 48 வயதான தினேஷ் ஷர்மன் ஆகியோர் இன்று (12) அதிகாலை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) 4 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள்…
-
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரு இளைஞர்கள் கைது!

டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்த இரு இளைஞர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்டிரைவ்கள் கைப்பற்றபட்டுள்ளன. டுபாயில் இருந்து இன்றையதினம் (17-05-2024) காலை குறித்த 2 இலங்கைப் பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.