Tag: Eelam Tamils

  • விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு தாயைப் போன்றவர் ; விஜய் உருக்கம்

    விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு தாயைப் போன்றவர் ; விஜய் உருக்கம்

    விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடந்த தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார். “உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எங்கள் உறவினர்களான ஈழத் தமிழ் மக்கள், தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றனர். எனவே, அவர்களுக்காகப் பேசுவது எங்கள் கடமை.”எனவும் அவர் குறிப்பிட்டார். நாகப்பட்டினம் போன்ற பெரிய கடற்றொழில் சமூகம் உள்ள பகுதிகளில்…

  • ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி

    ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி

    இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.…

  • லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன் ஈழத் தமிழர்கள் போராட்டம்

    லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன் ஈழத் தமிழர்கள் போராட்டம்

    பிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை போராட்டம் நடந்தது. அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் இப்போராட்டம் அனைத்துலக தொடர்பகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  • ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த வெள்ளையன் மரணம்; தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி

    ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த வெள்ளையன் மரணம்; தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி

    தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி ம்செலுத்தப்பட்டுள்ளது. ஈழ மக்கள் மீது பெரும் பற்றுக்கொண்ட அவரது மறைவுக்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள் மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் நன்கு பரிச்சயமான ஒரு பெயர் த. வெள்ளையன். தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவரான வெள்ளையன், உதிரிகளாக சிதறிக் கிடந்த தமிழக…