Tag: Elephant

  • ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை

    ஒரே ஒரு ‘செல்பி’; ரஷ்ய பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிய யானை

    கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார். வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு அருகில் சென்று நிழற்படம் எடுக்க முயன்றபோது யானை அவரைத் தாக்கியுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவருடன் சென்ற கணவர் காயமின்றி தப்பியுள்ளார்.…

  • யானைகளை கொல்ல முடிவெடுத்த நாடு; உலகளவில் கடும் விமர்சனம்

    யானைகளை கொல்ல முடிவெடுத்த நாடு; உலகளவில் கடும் விமர்சனம்

    உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்கின்றன. அதேபோல போட்ஸ்வானாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது. ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல்…

  • அனுராதபுரத்தில் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த தாய்!

    அனுராதபுரத்தில் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த தாய்!

    அனுராதபுரம் மகாவிலாச்சி பகுதியில் யானை தாக்கியதில் தாயொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றையதினம் (28-10-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மகாவிலாச்சி பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த தாயார் நேற்றையதினம் (28-10-2024) தனது வீட்டுத் தோட்டத்துக்கு வந்த காட்டு யானையைத் துரத்த முயன்றபோது யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.