-
யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற இளைஞன்…
-
யாழில் மகள் மூட்டிய நெருப்பில் தாய் பலி

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில்…
-
தமிழர்களை இழிவுபடுத்தும் அருண் சித்தார்த் அலுவலகத்திற்கு தீவைப்பு

தமிழர்களை இழிவுபடுத்தும் அருண் சித்தார்த்தின் யாழ் அலுவலகம் இனம் தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடைகளை கொண்ட கடைத்தொகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை தீ வைக்கப்பட்டுள்ளது. இரு நபர்கள் கதவுக்கு தீ மூட்டி விட்டு தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த…
-
சுவிற்ஸர்லாந்தில் புத்தாண்டில் பெரும் தீ விபத்து ; 40ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

சுவிற்ஸர்லாந்து கிரான்ஸ் – மொன்டானா (Crans-Montana) என்ற ரிசோர்ட் நகரில் உள்ள பாரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் சுமார் 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு நேரப்படி, நேற்று (ஜன. 1) அதிகாலை 1.30 மணியளவில் பாரில் விருந்தினர்கள் அனைவரும் புத்தாண்டு நிகழ்வுகளில் மூழ்கியிருந்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,…
-
படி என கூறியதால் தீயில் எரிந்த யாழ்ப்பாண மாணவி

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் தாயார் கல்வி கற்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால், மனமுடைந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த வயது 15 மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த மாணவியை அவரது தாயார் தினமும் பாடங்களைப் படிக்குமாறு கூறி வந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி, கடந்த 12ஆம் திகதி வீட்டில் குப்பைகளை எரிப்பது போல நடித்து, தன் மீது பெற்றோலை ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு…
-
யாழ் ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை மரணத்தில் புதைந்துள்ள மர்மம் என்ன?

யாழ் பல்கலைக்கழக கல்வித்துறையின் தலைவரராணசிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன் அவர்களின் மனைவியான ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை நிசாந்தினி தீ விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நித்தியவர்ணனும் மனைவியும் கொழும்புக்கு சென்று திரும்பி அதிகாலை வீட்டுக்கு வந்த பின்னா அங்கு இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே குக்குரல் கேட்டதாகவும் அயலவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் விரிவுரையாளர் மற்றும் அவரது மனைவி நிசாந்தினி ஆகியோர் தமது வீட்டுக்கு வாகனம்…
-
வவுனியாவில் பற்றி எரிந்த சிங்கர் க்ஷோ ரூம்

வவுனியாவில் தனியார் நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வவுனியா – ஹொரவபொத்தானை வீதியில் அமைத்துள்ள சிங்கர் காட்சியறையிலையே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து, தீயணைப்பு படையினர் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பெருமளவானோரின் பெரும் போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தில் காட்சியறையில் காணப்பட்ட பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள், தளபாடங்கள் என கோடிக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து…
-
இலங்கையில் காதலுக்கு எதிப்பு தெரிவித்த தாய்க்கு தீவைத்த 13 வயது சிறுமி

பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 04ஆம் திகதி 13 வயதான சிறுமி தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில் , படுகாயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து தாய்க்கு தீ வைத்தார் எனும்…
-
பிரித்தானியா பள்ளிவாசல் மீது தீ வைப்பு; வெறுப்புக் குற்றமா?

பிரித்தானியாவின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தீ வைப்பு தாக்குதலை “வெறுப்பு குற்றம்” என ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸார் விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு சசெக்ஸின் பீஸ்ஹேவனில் உள்ள ஃபிலிஸ் அவென்யூவில் சனிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு தீ வைப்பு தாக்குதல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக, அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் பள்ளிவாசலின் முன் நுழைவாயில் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களில்…
-
யாழில் தீயில் கருகி முதியவர் உயிரிழப்பு

யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் (02) பரிதாபமாக உயிரிழந்தார். பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த மா.சின்னமணி (வயது 95) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த 26ஆம் திகதி அன்று சுருட்டு புகைப்பதற்கு பற்றவைத்த தீக்குச்சியை தவறுதலாக அவர் அணிந்திருந்த ஆடையில் போட்டவேளை தீப்பற்றியதில் அவர் தீக்காயங்களுக்கு உள்ளானார். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்…