-
சகோதரர் தகராறில் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான உந்துருளி தீவைப்பு

சகோதரர் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 10 லட்சம் பெறுமதியான உந்துருளி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அண்டிய பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் கருத்து தெரிவிக்கையில், இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படு காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
-
குருநாகல் எரிபொருள் நிலைய தீயில் கருகி நால்வர் உயிரிழப்பு

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
-
குடும்பத் தகராறில் குழந்தையுடன் தீ வைத்த பெண்

குடும்பத் தகராறு காரணமாக தம்புள்ளை கண்டலம பகுதியில் பெண் ஒருவர் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்றுடன் தீ வைத்துக் கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காயமடைந்த தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் 3 பிள்ளைகளின் தாய் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. தீக்காயத்திற்குள்ளான பெண்ணுக்கும், கணவருக்கும் இடையில் ஏற்படும் தகராறின் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் மன…
-
யாழில் தமிழினி மரணத்தில் தந்தைக்கு சந்தேகம்; சிக்குவாரா விதானையார்

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். உயிரிழந்த பிரதேச செயலக உதவி பிரதேச செயலரின் தந்தையான பி. சண்முகராசா , தனது மகளின் உடலில் தீ பற்றியமை தொடர்பில் சந்தேகம் உள்ளதாக கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
-
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு

இன்று (22) அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலையில் உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்ரீகர்கள் குழுவுடன் வந்து, ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். இதன்போது, அவர்கள் வந்த பேருந்தில் இவ்வாறு தீப்பிடித்துள்ளது. அந்த பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 55…
-
யாழ்ப்பாணத்தில் தீயில் எரிந்த தமிழினி மரணத்தில் சந்தேகம்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளரான இளம் குடுப்ப பெண் தமிழினி மரணத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிற்சை பலனின்றி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆறு மாத கர்ப்பிணியான 33 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், படுக்கையறையில் இருந்த நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் , தீக்காயங்களுக்கு உள்ளானதாக…
-
அதிகபட்ச நஷ்டஈடு 25 லட்சம் ரூபாய்; கோடிக்கணக்கில் வழங்கியது எப்படி ?

2022 இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டத்தின்போது தீக்கிரையான வீடுகளுக்கு தீ காப்பீட்டால் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கலாநிதி பிரதிப மஹாநாமஹேவா கோரிக்கை விடுத்துள்ளார். 2005 ஆம் ஆண்டு இடர் முகாமைத்துவச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும் இலங்கையின் இடர் நிவாரணக் கொள்கையின்படி, முழுமையாக அழிக்கப்பட்ட வீடுகளுக்கான நஷ்டஈட்டுத் தொகை 2.5 மில்லியன் ரூபாய்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டது குறித்து கலாநிதி…
-
லிட்டில் இந்தியாவில் தீ விபத்து

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் 31 நோரிஸ் சாலையில் உள்ள கடைவீடு ஒன்றில் இன்று (பிப்ரவரி 3) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. கடைவீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காட்டும் காணொளி, சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இந்த தீ விபத்து காரணமாக இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று…
-
யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண் முடிவால் அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் (25) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ள ச்ம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுன்னாகம் கிழக்கு, குமாரசுவாமி புலவர் வீதியைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் பிள்ளைகள் வேலைகளுக்கு செல்வதனால் அவர் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நிலையில் வீட்டுக்கு அருகேயுள்ள வாழைத்தோட்டத்திற்கு சென்று, மண்ணெண்ணெயை…
-
யாழ்ப்பாணத்தில் எரியுண்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம்

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.