-
குளிருக்காக மூட்டிய நெருப்பு… முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் நேற்று (29) பிற்பகல் முதியவர் ஒருவர் தனது வீட்டில் தீப்பிடித்து எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 75 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாட்டில் தற்போது நிலவும் குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை…
-
பாடசாலையில் ஏற்பட்ட திடீர் தீயில் இரு மாடிகள் எரிந்து நாசம்

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பிற்பகல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டிடம் தீப்பற்றி எரிவதை கண்டு, சந்தமிட்டதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் மற்றும் மாலிம்பட பொலிஸார் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியதுடன், பாடசாலை வளாகத்தில் இருந்த நாய் ஒன்றும் தீயில் சிக்கி…
-
ரணில் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5வது சந்தேகநபருக்கு பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கடும் பிணை நிபந்தனைகளுடன் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும் 11ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்…
-
யாழில் புடவைக்கடைக்கு தீ வைத்த விசமிகள்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்று புதன்கிழமை (02) இரவு , மூவர் அடங்கிய வன்முறை கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆடைகள் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
யாழ்ப்பாணம் நீர்வேலியில் பாரிய வெடிப்பு சம்பவம்; பெண் பலி

யாழ்ப்பாணம் நீர்வேலி சந்திக்கு இருகில் உள்ள வீடு ஒன்றில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் வீட்டில் தனிமையில் இருந்த 65 வயதுடைய பெண் ஒருவரே மேற்படி உயிரிழந்துள்ளார் இந்த வெடிப்பினால் வீட்டுக் கூடை பாரிய அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் வீட்டின் வெளியே எரிந்த நிலையில் இரண்டு சிலிண்டர்கள் வீசப்பட்டுள்ளன குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாரிய வெடிப்பு சம்பவம் தொடர்பில் மர்மமாக இருப்பதாக மக்கள்…
-
மட்டக்களப்பில் திடீரென தீப்பிடித்த ஆலயத்தால் பரபரப்பு!

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜை வழிபாடுகளை அடுத்து நேற்றிரவு இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பிரதேச மக்களும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீப்பரவலில் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
அவுஸ்திரேலியாவில் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட ஈழத்தமிழர்!

அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்னின் புகலிடம் கோரி தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 23 வயதான இலங்கைத் தமிழர் கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். தற்காலிக விசாவில் சுமார் 11 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த அவர், முன்னதாக புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. 23 வயதான மனோ யோகலிங்கம் என்ற இளைஞன்…
-
யாழில் தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (27-08-2024) உயிரழந்துள்ளார். இச்சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்ப பெண் கடந்த 25ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த…
-
புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீவைத்து விட்டு தப்பியோடிய நபர்!

வென்னப்புவ பிரதேசத்தில் நான்கு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வென்னப்புவ லேக் வீதியில் உள்ள வாகன திருத்தும் நிலையமொன்றில் பழுதுபார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு பஸ்கள் இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், அருகில் உள்ள சிசிரிவி கமராவில் இருந்து, ஒரு நபர் வந்து பஸ்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த…
-
யாழில் வீடொன்றில் வாகனத்தை தீ வைத்துக் கொழுத்திய கும்பல்

யாழ்ப்பாணத்தில் வாகனம் ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர், தனது வாகனத்தினை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தவேளை சனிக்கிழமை நள்ளிரவு வேளை வாகனத்திற்கு தீ வைத்து விட்டு, வன்முறை கும்பல் தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரால், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.