-
களுத்துறை பிரதேச செயலக கட்டிடத்தில் தீ விபத்து

களுத்துறை பிரதேச செயலக கட்டிடத்தில் இன்று புதன்கிழமை (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆறு மாடிகளை கொண்ட களுத்துறை பிரதேச செயலக கட்டிடத்தின் தரை தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளனர். கட்டிடத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் மூச்சுத்திணறல்…
-
யாழில் அதிர்ச்சி சம்பவம்; மகளால் தாய் விபரீத முடிவு

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. சம்பவத்தில் பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து…
-
யாழில் எரியூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் நபரொருவர் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 20.06.2024 அன்று இரவு நபரொருவர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு (30.06.2023) மரணமடைந்துள்ளார்.மருதங்கேணியைச் சேர்ந்த 44 வயதான சரவணபவானந்தன்…
-
யாழில் மின் ஒழுக்கால் தீக்கிரையான வீடு

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம் முற்றாக இருந்து நாசமாகியுள்ளது. வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேலை வீடு முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளது வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரம்பலை கட்டுப்படுத்தியுள்ளனர். தீப்பரவலில் வீட்டின் மேல் தளம் கட்டில் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள், அலுமாரி வீட்டின் ஏனைய உபகரணங்கள்…
-
வவுனியா தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலை, வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.தொழில்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ…
-
கிளிநொச்சி நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்!

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர் கைபேசியை பேசியபடி எரிபொருள் நிரப்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிறறியோடி நிலையில் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் துரிதமாக செயற்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
-
குவைத்தில் உயிரிழந்த 45 பேரின் சடலங்களும் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் 45 பேரின் சடலங்களும், இன்று(14) காலை இந்தியாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சடலங்கள் இராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, கொச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
-
குவைத்தில் இந்தியர்கள் வாழும் கட்டிடத்தில் பாரிய தீ விபத்து; 35 பேர் உயிரிழப்பு

தெற்கு குவைத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறைந்தது நான்கு இந்தியர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகம் மற்றும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் குவைத் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்தவர்கள் அனைவரும் பல வைத்தியசாலைகளில்…