-
யாழில் அதிசயம், ஆனால் உண்மை… மழையுடன் விழுந்த மீன்கள்

அண்மைய நாட்களாக யாழில் பெய்து வரும் மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகின்றது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன. அந்த மீன்களை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் யாழில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.