-
இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்தப்போவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளவத்தை 33வது வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். விரோத முறைப்பாடாக இதனை பொலிஸார் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
-
கட்டுநாயக்க வந்த விமானத்தில் திருடிய சீனப் பிரஜைகள்

தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய காவல்துறையினரால் (07) கைது செய்யப்பட்டனர், மேலும் பணத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டது. இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ள 71 வயதான இவர், ராகம, வெலிசறை பகுதியில் வசிக்கும் உறவினர்களைப் பார்க்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307…
-
விமானி கடவுச்சீட்டை மறந்து சென்றால் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானமொன்றின் விமானி தமது கடவுச்சீட்டை மறந்து சென்றதால் குறித்த விமானம் மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இருந்து 257 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சீனாவிற்குப் பயணித்த விமானமே இவ்வாறு மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானம் சுமார் 2 மணிநேரம் தாமதமடைந்தமையின் காரணமாக அது சென்பிரான்சிஸ்கோ நோக்கி மாற்றி அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தின் நிறுவனம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு, இதனால்…
-
இலங்கையில் வெடித்துச் சிதறிய விமானம்; உயிர் தப்பிய விமானிகள்

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்க பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த ஜெட் விமானம், ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. குருநாகல் வாரியபொல பகுதியில் வௌ்ளிக்கிழமை (21) காலை இடம்பெற்ற பயிற்சி விமான விபத்து தொடர்பில், இலங்கை விமானப்படை அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.…
-
ஊசி குத்தியதால் 18,000 டொலர் இழப்பீடு கேட்ட பயணி!

விமானத்தில் விட்டுச்செல்லப்பட்ட ஊசி தம்மைக் குத்தியதால் நபர் ஒருவர் 18,000 டொலர் இழப்பீடு கோரியுள்ளார். சீனாவைச் சேர்ந்த அவர் ஊசி குத்தியதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சுவதாகவும் அதற்காகவே இழப்பீடு கேட்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சீனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த அவர் இருக்கையில் அமர்ந்திருந்தபோது தம்முடைய கைத்தொலைபேசியை எடுக்க முயன்ற போது அவரின் விரலில் ஊசி ஒன்று குத்தியது. அது இன்சுலின் (insulin) ஊசியாக இருக்கலாம் என்று அந்த நபர் சந்தேகிக்கின்றார். விமான ஊழியர்கள்…
-
47 ஆண்டுகளுக்குப் பின் யாழ்ப்பாணம் – திருச்சி புதிய விமான சேவை

இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 30 முதல் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி இடையே புதிய விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் திருச்சி இடையே 47 ஆண்டுகளுக்குப் பின் நேரடி விமான சேவையை தொடங்குகிறது, இதற்கு முன்பு ஏர் சிலோன் இந்த விமான சேவையை இயக்கியது. இண்டிகோ நிறுவனம் தொடங்கும் இந்த நேரடி விமான சேவை தினமும் இயக்கப்படும் என அந்நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு…
-
கனடாவில் தரையிறங்குகையில் தலைகீழாக கவிழந்த விமானம்

கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள விமான நிலையத்தில் டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக அவசர சேவைகள் தெரிவிக்கின்றன. மினியாபோலிஸில் இருந்து காலை 11.47 மணியளவில் புறப்பட்ட டெல்டா விமானம் கனடாவின் டொராண்டோவில் பனிமூட்டமான ஓடுபாதையில் அதிக பனிமூட்டம் காரணமாக தரையிறங்கும் போது தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. விபத்தின் போது விமானத்தில் 76 பயணிகளும் 4 பணியாளர்களும்…
-
விமானத்தில் பெண் பயணியிடம் இலங்கையர் பாலியல் சீண்டல்!

அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அவுஸ்திரேலியா நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது. தையடுத்து கைதான இலங்கையர் மறுநாள் 19ஆம் திகதி அந்நபருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது. அதோடு…
-
யாழ் விமான நிலையம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 077 465 3915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க என்பவரை தொடர்புகொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது. அல்லது, 021 221 9373 என்ற இலக்கத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும். அதேவேளை…
