-
இசைப்பிரியா படுகொலை; ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்பு; பொன்சேகா தகவல்!

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பொன்சேகா அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இறுதிப்போரின்போது 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சரணடைந்தனர். பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும் மக்களுடன் மக்களாகச் சரணடைந்தனர். அவர்களுக்குத் தேவையான உடை உணவு, மருந்து என்பவற்றை வழங்கி, புனர்வாழ்வில் இருந்து செல்லும் வரை அனைவரையும் முறைப்படி பாதுகாத்தோம். எனினும், இறுதிப்போரின் போது…
-
முன்பிணை கோரும் கோத்தபாய புலனாய்வு அதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோத்தபாய இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதாகலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான கே.எஸ். மத்துமகே தாக்கல் செய்த முன்பிணை மனு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே…
-
சிஐடியில் ஒன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷ!

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ Gotabaya Rajapaksa சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று குறித்து வாக்குமூம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
யாழ்ப்பாணம் வரமாட்டேன் வேறு எங்கென்றாலும் சாட்சியமளிப்பேன்; கோட்டாபய!

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார். இந்நிலையில் , அது தொடர்பான சாட்சியங்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் வழங்கத் தயார் என கோட்டபாய சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சாட்சியமளிக்க அழைக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை…
-
நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய!

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளம் சென்றுள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்து கோட்டாபய ராஜபக்ச நேபாள தலைநகரை திங்கட்கிழமை வந்தடைந்தார் என அந்த நாட்டின் செய்திகள் தெரிவித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச நேபாளத்தில் பௌத்தமதத்துடன் தொடர்புள்ள பகுதிகளிற்கு செல்லதிட்டமிட்டுள்ளார் என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் பல முதலீடுகளை செய்துள்ள நேபாளத்தின் சௌதாரி குடும்பத்துடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு நெருங்கிய தொடர்புள்ளது,அவர்கள் அவரை…
-
நேபாளம் சென்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அங்கு பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பயணம் அரசியலை விட…
-
நாளை தேர்தல்; கோட்டா, பசில் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில் இன்று (20) அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK 659 இல் அவர் டுபாய்க்கு புறப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிறுவனத்தின் கோல்ட் ரூட் ஸ்பெஷல் என்ட்ரியின் ஊடாக முன்னாள் அமைச்சர் பிரவேசித்து தனியாக…
-
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை வௌியிடுமாறு உயர் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு கோரி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் மிரிசுவில் பகுதியில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட இடம்பெயர்ந்திருந்த 8 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.…