-
யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற இளைஞன்…
-
யாழ் மருதனார்மட சந்தைக்கு துப்பாகியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு

யாழ்ப்பாணம், மருதனார்மட சந்தைக்கு இன்று (10) காலை 06.03 மணிக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகை தந்த நபர் தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. கையில் கொண்டு வந்த…
-
கைத்துப்பாக்கியுடன் சுற்றும் அருச்சுனா இராமநாதன்

அனுர அரசிடம் தான் கைத்துப்பாக்கி பெற்றுக்கொண்டதாக தனது முகநூலில் ஏற்றுக்கொண்டுள்ளார் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். தன் இனத்திற்காக தன்னை இழப்பதற்கு தயாராக இல்லாதவனால் ஒரு இனத்தின் வழிகாட்டியாக மாற முடியாது. இது எங்களுக்கு காலம் சொல்லித் தந்த பாடம்! தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவன் தன் இனத்தையும் பாதுகாக்க போவதில்லை. நீங்கள் கேட்கின்ற சகல கேள்விகளுக்கும் உரிய ஒரே ஒரு பதில். ஆம் அரசாங்கம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு தர மறுத்திருக்கிறது.…
-
கொழும்பில் முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து டி-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் அவர் இந்தத் துப்பாக்கியைத் தம்சவம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து, தங்களிடமிருந்து தகவல்…
-
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியுடன் பெண்கள் கைது

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 68 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (21) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை…
-
பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியாக இருந்த நடன ஆசிரியை கைது

T 56 துப்பாக்கியுடன் காணாமல் போய் துபாய் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலியாக இருந்த நடன ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இரவு விடுதிகளில் நடனமாட வந்தபோது பொலிஸ் கான்ஸ்டபிளை சந்தித்து காதல் கொண்டதாக தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற கான்ஸ்டபிள் தொடர்பாக விசாரணை நடத்தியதில், இந்த நடன ஆசிரியை உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் எந்த நோயும் இல்லை என்று தெரிந்ததும், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர்…