Tag: Gun fire

  • யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

    யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

    யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளை மீறிச்சென்ற இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்துள்ளனர். இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச்…

  • துப்பாக்கி சூட்டில் இளைஞன் உயிரிழப்பு

    துப்பாக்கி சூட்டில் இளைஞன் உயிரிழப்பு

    களுத்துறை – கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.