Tag: Gun Shoot

  • யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

    யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

    யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி வழியாக இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.எனினும், கட்டளையை மீறி குறித்த வாகனம் மண்டைத்தீவு நோக்கி பயணித்துள்ளது. இதன்போது, மண்டைத்தீவு பகுதியில் கடமையில்…

  • களுத்துறை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு; அதிகாலையில் பரபரப்பு

    களுத்துறை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு; அதிகாலையில் பரபரப்பு

    களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைக்குள்…

  • கொழும்பில் STFஅதிரடி; இன்றுகாலை சுட்டு கொல்லப்பட்ட நபர்

    கொழும்பில் STFஅதிரடி; இன்றுகாலை சுட்டு கொல்லப்பட்ட நபர்

    தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு முயற்சியில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி இன்று அதிகாலை கஹதுடுவ, பஹலகமவில் பொலிஸ் சிறப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கஹதுடுவ பகுதியில் சிறப்புப் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கைவிடப்பட்ட வீட்டில் சந்தேக நபர் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதனால் சிறப்புப் படையினர் திருப்பிச் சுட்டதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச்…

  • துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு

    துப்பாக்கி சூட்டில் பெண் உயிரிழப்பு

    புத்தளம் மாரவில, மாரண்டா பகுதியில் நேற்றைய தினம் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 30 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பெண் தனது வீட்டின் முன் இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அருகில் இருந்த 10 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  • தன்னைதானே சுட்டு உயிரிழந்த பொலிஸ்

    தன்னைதானே சுட்டு உயிரிழந்த பொலிஸ்

    மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பொலிஸ் நிலையத்தின் ஓய்வு அறையில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹசலக்க பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஏ.எம். உபசேன அத்தநாயக்க எனவும், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

  • என்கவுன்டரில் ஈடுபட்ட பொலிஸார் அதன் விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும்

    என்கவுன்டரில் ஈடுபட்ட பொலிஸார் அதன் விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும்

    பொலிஸாரின் என்கவுன்டர் கொலைகள் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறையல்ல என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ், என்கவுன்டரில் ஈடுபட்ட பொலிஸார் அதற்கான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்படலாம் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பொலிஸாரின் என்கவுன்டர் கொலைகள் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறையல்ல. பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸாரின் பிடியில் உள்ளபோது சந்தேகநபர்கள் கொல்லப்படுவது குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் குறித்த ஆதாரங்களை அழித்துவிடும். மேலும் இந்த கொலைகளில் ஈடுபட்ட பொலிஸார் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். என்கவுன்டர்களில் ஈடுபட்ட…

  • 15 வயது சிறுவன் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

    15 வயது சிறுவன் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

    கர்நாடகாவில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த அந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பலதண்டி நேற்று மண்டியாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மண்டியா அருகேயுள்ள நாகமங்களாவில் மஞ்சுநாத் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில்…

  • மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தவகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மூவர் பலி

    மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தவகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மூவர் பலி

    காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​. உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான…

  • மன்னாரில் துப்பாக்கி சூடு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

    மன்னாரில் துப்பாக்கி சூடு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

    மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், புதன்கிழமை(29) கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சந்தேக நபரை வியாழக்கிழமை (30) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.…

  • இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு ; இருவர் யாழ் . போதனா வைத்தியசாலையில்

    இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு ; இருவர் யாழ் . போதனா வைத்தியசாலையில்

    இலங்கை கடற்படையினரை கடத்த முயன்ற இந்திய கடற்தொழிலாளர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு கடற்தொழிலாளிகள் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை கடற்பரப்பினுள் படகொன்றில் 13 கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டனர் அதன் போது , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தொழிலாளிகளை கைது செய்யும் நோக்குடன் அவர்களின் படகில் ஏறிய வேளை , படகில் ஏறிய கடற்படையினருடன் படகில் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.…