-
பளை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் வன்முறை கும்பல் தாக்குதல்

கிளிநொச்சி – பளை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த 04 பேர் கொண்ட கும்பல் நேற்றைய தினம் புதன்கிழமை உடைமைகள் அடித்து நொறுக்கி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பளை சோரன்பற்று பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்றைய தினம் புதன்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் தமது முகங்களை துணியினால் மறைத்துக்கொண்டு கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டு என்பவற்றுடன் வீட்டிற்குள் நுழைந்து உடமைகளை தாக்கி தீயிட்டுள்ளனர். இதில்…
-
பதுளை சிறுவர் காப்பகத்தில் குழந்தை ஒன்று திடீர் உயிரிழப்பு

சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 3 மாத குழந்தை ஒன்று தீடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை – பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பக குழந்தையே உயிரிழந்துள்ளனர். குழந்தை தீடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
தேசபந்துவுக்கு வீட்டிலிருந்து சிறை செல்லும் உணவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (24) முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார். வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.…
-
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்டதால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா இன்று(பிப்.26) மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, நேற்று அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்தித்து பேசினார். இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென…