Tag: Hospital

  • யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

    யாழில் இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

    யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளை மீறிச்சென்ற இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்துள்ளனர். இதன்போது, பொலிஸாரின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச்…

  • யாழில். வைத்தியசாலை சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்

    யாழில். வைத்தியசாலை சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்

    ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டதால் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியவர் , கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் , திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , நிமோனியாவினால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணைகளில்…

  • யாழில் போதை தலைக்கேறியதால் யுவதி உயிரிழப்பு

    யாழில் போதை தலைக்கேறியதால் யுவதி உயிரிழப்பு

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய…

  • Crypto கரண்சியால் யாழில் விபரீத முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்

    Crypto கரண்சியால் யாழில்  விபரீத முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்

    திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இ தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் , யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் வயது 30 என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . உலகளாவிய ரீதியில் Crypto பாரிய சரிவை…

  • யாழ் போதனாவில் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

    யாழ் போதனாவில் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

  • கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு : இருவர் படுகாயம்

    கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு : இருவர் படுகாயம்

    கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது இதன் போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

  • யாழ் சாவகச்சேரி கோர விபத்தில் இளைஞர் பலி

    யாழ் சாவகச்சேரி கோர விபத்தில் இளைஞர் பலி

    யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி – நுணாவில் ஏ – 9 வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதனால் மேற்படி இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

  • மருத்துவ தவறால் கை இழந்த சிறுமி; யாழ் போதனா வைத்தியசாலை தாதிக்கு தடை

    மருத்துவ தவறால் கை இழந்த சிறுமி; யாழ் போதனா வைத்தியசாலை தாதிக்கு தடை

    யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நாட்டைவிட்டு வெளியேற வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் சிறுமியின் மணிக்கட்டு பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்த விடயத்தில் வைத்தியத்…

  • யாழில் பிறந்தவுடன் உயிரிழந்த இரட்டை குழந்தைகள் ; துயரத்தில் பெற்றோர்

    யாழில் பிறந்தவுடன் உயிரிழந்த இரட்டை குழந்தைகள் ; துயரத்தில் பெற்றோர்

    யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி தம்பதிகளின் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைகளின் தாயாருக்கு கடந்த 21 ஆம் திகதி இரவு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இதன்போது அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தபோது…

  • விபத்தில் சிக்கிய சிறிநேசன் எம்பி

    விபத்தில் சிக்கிய சிறிநேசன் எம்பி

    மட்டக்களப்பு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பிரயாணித்த வாகனம் களுவாங்சிக்குடி பிரதேசத்தில் கார் ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துளார். அம்பாறை ஆலையடிவேம்பில் இன்று இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு சம்பவ தினமான இன்று காலை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டுவிட்டு மட்டக்களப்பை நோக்கி பிற்பகல் 4.00 மணியளவில் வாகனத்தில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அருகில் கார் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்துடன் ஒன்றோடு ஒன்று…