-
வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலம்

கொழும்பு – கெஸ்பேவ, படுவன்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (28) இரவு அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது பெண்ணொருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர் 8 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மூன்று லட்சம் ரூபாய் நிலுவை; மகிந்த இல்லத்திற்கு தண்ணீர் இல்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம இல்லத்தின் பாதுகாவலர்கள் தங்கியிருக்கும் பகுதியினது நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் பகுதியில் நீர் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. இந்த இல்லத்தின் நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
சனத் நிஷாந்த இல்லத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இறப்பதற்கு முன்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி திருமதி சாமரி பெரேராவிற்கு உடனடியாக வீட்டைக் கையளிக்குமாறு பல முறை நினைவூட்டிய போதிலும், அவர் தொடர்ந்தும் வீட்டைக் கையளிக்க மறுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான வீட்டு வாடகையை கூட அவர் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.…
-
யாழில் மின் ஒழுக்கால் தீக்கிரையான வீடு

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம் முற்றாக இருந்து நாசமாகியுள்ளது. வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேலை வீடு முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம் பெற்றுள்ளது வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரம்பலை கட்டுப்படுத்தியுள்ளனர். தீப்பரவலில் வீட்டின் மேல் தளம் கட்டில் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள், அலுமாரி வீட்டின் ஏனைய உபகரணங்கள்…
-
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ் அச்சுவேலி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத குழு ஒன்று பெற்றோல் குண்டு தாக்குதலில் வீடு பலத்த சேதமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர். அச்சுவேலி மேற்கு கருமந்திரதுறை வீதியிலுள்ள பாலசிங்கம் சதானந்தன் என்பவரது வீட்டின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவர் பண்ணை ஒன்றை நடாத்திவருவதாகவும் இவரின் சகோதரிக்கும் இவருக்கும் இடையே சொத்து சம்மந்தமான பிரச்சனை இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை…