Tag: Husband

  • வாழைச்சேனையில் கணவனை கொன்ற மனைவியால் அதிர்ச்சி

    வாழைச்சேனையில் கணவனை கொன்ற மனைவியால் அதிர்ச்சி

    வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (15) வாகனேரி குடாமுனைகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா எனும் 46 வயதானவர். மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவர் வயல் காவல் கடமையில் ஈடுபடுபவர் என்றும் அன்றைய தினம் வயலுக்கு சென்று வீடு திரும்பியதும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர் . குறித்த…

  • மட்டக்களப்பில் பயங்கரம்; மனைவியை கொன்ற கணவன்

    மட்டக்களப்பில் பயங்கரம்; மனைவியை கொன்ற கணவன்

    வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் நேற்று (17) கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் மின்விசிறியின் வயரினால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கணவனும் விஷம் அருந்தி உயிர்மாய்ப்புக்கு முயற்சித்துள்ள நிலையில், அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 22 வயது என தெரியவந்துள்ளது. 25 வயதான சந்தேக நபர் வைத்தியசாலையில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் உள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக…

  • நடிகை ரக்சிதாவின் முன்னாள் கணவர் கைது

    நடிகை ரக்சிதாவின் முன்னாள் கணவர் கைது

    நடிகை ரக்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ் மீது பணமோசடி தொடர்பாக புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசால் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். தினேஷ் மீது, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஊரைச் நேர்ந்த கருணாநிதி என்ற நபர் பண மோசடி புகார் அளித்துள்ளார். நடிகர் தினேஷ் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 3 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, தனது மனைவிக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். ஆனால்,…

  • கணவன் , மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு; NPP நகர சபை உறுப்பினர் இராஜினாமா!

    கணவன் , மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு; NPP நகர சபை உறுப்பினர் இராஜினாமா!

    கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். திஸ்னா நிரஞ்சலா குமாரி என்ற பெண் உறுப்பினரே இவ்வாறு பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது கணவர் மற்றும் மகன் தொடர்பில் தற்போது சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முழு கவனம் செலுத்தி வரும் இவ்வாறானதொரு தருணத்தில் நடந்த…

  • மீரிகம பகுதியில் பயங்கரம்; குடும்ப பெண் கொலை

    மீரிகம பகுதியில் பயங்கரம்; குடும்ப பெண் கொலை

    மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

  • யாழில் கர்ப்பிணி அரச அதிகாரி உயிரிழப்பு; கணவன் கைது

    யாழில் கர்ப்பிணி அரச அதிகாரி உயிரிழப்பு; கணவன் கைது

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில்…

  • நாத்தனார் வழக்கை தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல் செய்த ஹன்சிகா!

    நாத்தனார் வழக்கை  தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல் செய்த ஹன்சிகா!

    தமிழ் சினிமாவில்  ஒரு காலத்தில் மிகவும் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதற்கு அவர் நடிப்புக்குத் தீனி போடும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது. இதையடுத்து அவர் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானியின் முன்னாள் மனைவியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கன் நான்சி ஹன்சிகா மற்றும் அவரின் தாயார் மேல்…

  • மனைவியைக் கொன்று பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்த கொடூர கணவன்

    மனைவியைக் கொன்று பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்த கொடூர கணவன்

    இந்தியா – ஹைதராபாத் ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, அவற்றை ஏரியில் வீசி தனது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார். குருமூர்த்தி, 45, என்பவரின் மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவலர்கள் நடத்திய விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த ஜனவரி 16ஆம் தேதி வெங்கட மாதவி, 35, காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். காவலர்களின் விசாரணையின்போது,…

  • யாழில் மனைவியின் அந்தியேட்டியில் கணவன் உயிரிழப்பு

    யாழில் மனைவியின் அந்தியேட்டியில் கணவன் உயிரிழப்பு

    யாழ்ப்பாணம் காரணவாய் பகுதியில் மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது , கணவனும் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காரணவாய் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்திருந்தார். அவரின் அந்தியேட்டி கிரியைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அதன் போது, உயிரிழந்த பெண்ணின் கணவனான முத்தன் தர்மலிங்கம் என்பவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.

  • மனைவியின் மூக்கை அறுத்த கோபக்கார கணவன்

    மனைவியின் மூக்கை அறுத்த கோபக்கார கணவன்

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்ன மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. லக்னோவில் பூர்வா [Baniyaani Purwa] பகுதியில் வசித்து வரும் ராகுல் – அனிதா தம்பதியினரிடையே நேற்று (19) வாக்குவாதம் எழுந்துள்ளது. நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதே இந்த சண்டைக்குக் காரணம். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய…