Tag: india

  • மருத்துவமனை வளாகத்தில் காதல் ஜோடிகள் அநாகரிக செயல்

    மருத்துவமனை வளாகத்தில் காதல் ஜோடிகள் அநாகரிக செயல்

    இந்தியா மத்தியப் பிரதேசத்தில் மருத்துவமனை வளாகத்தில், சில காதல் ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் சம்பவம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றின் காத்திருப்பு பகுதியில் போர்வையால் மூடிக்கொண்டு அநாகரிக செயலில் ஈடுபடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. மற்றொரு காணொளியில், பூங்கா பகுதியில் ஒரு ஜோடி அநாகரிக செயல்களில் ஈடுபட்டது பதிவாகியுள்ளது. இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தற்போது குறித்த காணொளிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…

  • புதுடெல்லி கார் குண்டு வெடிப்பு; தீவிரவாத தாக்குதலா?

    புதுடெல்லி கார் குண்டு வெடிப்பு; தீவிரவாத தாக்குதலா?

    இந்திய தலைநகர் புதுடெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு இடம்பெற்ற சிற்றூந்து வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான, ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 9 பேர் பலியானதாக இந்தியாவின் சில ஊடகங்களும் 13 பேர் இறந்ததாகத் தமிழகத்தை மையப்படுத்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன. டெல்லியில் சிற்றூந்து குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும்…

  • இந்திய பாதாள உலக குழு தாவூத் இப்ராஹிம் உடன் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு

    இந்திய பாதாள உலக குழு தாவூத் இப்ராஹிம் உடன் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு

    இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான கூட்டணி குறித்து இந்திய புலனாய்வு அமைப்பு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. தாவூத் இப்ராஹிம் குழுவினர் போதைப்பொருள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சிப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்திய பாதாள உலக குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான தாவூத் இப்ராஹிம் விடுதலைப் புலிகளின் வலையமை புதுப்பித்து போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்துச்…

  • பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    பேருந்து விபத்தில் மூன்று சகோதரிகள் பலி; துயரத்தில் குடும்பம்

    தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் உறவினர்களின் திருமணம் கடந்த மாதம் 15-ம் தேதி தாண்டூரில் நடந்தது. இதற்காக 3…

  • இந்தியாவில் சொகுசு பேருந்தில் தீயில் கருகிய 25 பயனிகள் ; அதிகாலையில் உறக்கத்தில் பயங்கரம்

    இந்தியாவில் சொகுசு பேருந்தில் தீயில் கருகிய 25 பயனிகள் ; அதிகாலையில் உறக்கத்தில் பயங்கரம்

    இந்தியாவில் பஸ் ஒன்று தீப்பிடித்து 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வியாழக்கிழமை (23) இரவு பஸ் புறப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் 42 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் பகுதியில் இன்று செள்ளிக்கிழமை (24) அதிகாலை 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பஸ்ஸில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள்…

  • குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள்

    குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள்

    இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 20-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் மத்திய பிரதேச மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்தில் புழுக்கள் கிடந்தது பகீர் கிளப்பி இருக்கிறது. அங்குள்ள குவாலியர் மாவட்டத்தின் மொரார் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். அங்கு அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்து குழந்தைக்கு…

  • பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள்…

  • இந்தியாவில் இருந்து தங்கம் கடத்தி யாழ் விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்

    இந்தியாவில் இருந்து தங்கம் கடத்தி யாழ் விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்

    இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக பலாலிக்கு வந்த பெண்ணொருவர் தனது வயிற்றில் தங்கத்தை வைத்திருந்ததைப் பலாலி விமான நிலைய அதிகாரிகள் சோதனையில் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இந்தியாவில் இருந்து வயிற்றில் தங்கம் கொண்டு வந்துள்ளார். இந்தநிலையில், யாழ். பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்பின், கடத்தலில்…

  • ஏர் இந்தியா விமான விபத்து ; அமெரிக்காவில் வழக்கு

    ஏர் இந்தியா விமான விபத்து ; அமெரிக்காவில் வழக்கு

    கடந்த ஜூன் மாதம் இந்தியா அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தவறான எரிபொருள் சுவிட்சுகள் விபத்துக்குக் காரணம் என குறிபிட்டிருந்த அவ்ர்கள் , விமானத்தின் வடிவமைப்பின் அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் நிறுவனங்கள் “எதுவும் செய்யவில்லை” என்றும் குற்றம் சாட்டியது. எனினும் அமெரிக்க விமான உற்பத்தியாளர்…

  • இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்

    இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (12) தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 15-வது துணை ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கிறனர். துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களவை தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு…