-
புதுடெல்லியில் நிலநடுக்கம்

ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு அருகே இன்று வியாழக்கிழமை (10) காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று காலை 9.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ஹரியானாவின் ஜஜ்ஜருக்கு வடகிழக்கே 3 கிமீ தொலைவிலும், டெல்லிக்கு மேற்கே 51 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும்…
-
“புதைத்தவர்களிடம் கேட்டால்நீதி கிடைக்காது”; செம்மணி புதைகுழி தொடர்பில் நடிகர் சத்யராஜ்

யாழ்ப்பாணம் – செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில்…
-
காவடி யாத்திரை சென்றவர்களின் ஆடையை அவிழ்த்து சோதனை

வட மாநிலங்களில் ஸ்ரவண மாதம் ஜுலை 11-ம் திகதி முதல் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி உ.பி.யில் புனித யாத்திரை செல்லும் வீதிகளில் உள்ள கடைகளை இந்து அல்லாதவர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் பெயர், கைப்பேசி எண் போன்றவற்றை கடைக்கு முன்னர் எழுதி வைக்க வேண்டும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சிக் கடைகள்…
-
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அடித்துக் கொன்ற தந்தை

இந்தியாவின் மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தில் இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றதாக போலீஸார் ஒருவர் தெரிவித்தார் தோண்டிராம் போசலே (45), பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சாதனா(16) மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவரின் தந்தை போசலே கோபமடைந்துள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம்…
-
லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது. விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு மதியம் 1:10 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை

தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட பலரும் ஆச்சரியத்துடன் ‘என்னப்பா இது’ என்று சொல்ல வைக்கிறது. கொரோனா அதிகரித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள…
-
Miss World இல் வரலாற்று சாதனை படைத்த இலங்கை அனுதி

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர, Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அனுதியின் சிறப்பான ஆற்றல் மிக்க வௌிப்பாடு, Multimedia Challenge பிரிவில் உலகளாவிய இறுதிப் போட்டியில் முதல் 20 போட்டியாளர்களில் ஒருவராக அவரைப் பதிவு செய்தது. மேலும் இந்த பிரிவில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் இலங்கைப் போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்க சந்தை மறுப்பு: இந்திய மாம்பழ ஏற்றுமதியில் ₹4.2 கோடி இழப்பு!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள், அந்நாட்டில் சந்தைப்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால், ஏற்றுமதியாளர்கள் பெரிய நட்டத்திற்குள்ளாகியுள்ளனர். இது, இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி வர்த்தகத்தில் தீவிர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதிக்கான முயற்சி இந்தியாவின் தரமான ஆல்போன்சோ, பங்கன், கேசர், தசரி உள்ளிட்ட மாம்பழ வகைகள் உலக சந்தையில் பிரபலமானவை. 2025-ஆம் ஆண்டிற்கான இளம் மாம்பழ பருவத்தில், ஏராளமான ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க சந்தையை குறிவைத்து ஆயிரக்கணக்கான டன்கள் மாம்பழங்களை அனுப்பியிருந்தனர். அதே நேரத்தில், இந்தியா–அமெரிக்கா இடையிலான விவசாய உற்பத்தி…
-
ஓமந்தை கோர விபத்தில் இந்திய துணைத்தூதரக அதிகாரி உயிரழப்பு

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆலங்கட்டி மழையில் சிக்கிய இண்டிகோ விமானம் ; அலறிய பயணிகள்

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பத்திரமாக தறையிறக்கப்பட்டுள்ளது. 227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது. அந்தரத்தில் விமானம் குலுங்கியதால் பயணிகள் அலறியுள்ளனர். விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக தரையிறங்க பைலட் அனுமதி கேட்ட நிலையில், ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியுள்ளது. முன்பகுதி சேதமடைந்த விமானம் பாதுகாப்பாக ஸ்ரீநகரை அடைந்த நிலையில் பயணிகள் நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர்.