-
யாழ் அல்லப்பிட்டி இளைஞன் மரணம்; வீதியில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது. அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்…
-
யாழில் இளைஞனின் தலையை துளைத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற இளைஞன்…
-
விமான நிலையத்தில் யாழ் ஆவா குழு உறுப்பினர்கள் கைது ; திடுக்கிடும் தகவல்!

கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு ஆட்களை விநியோகிக்கும் பகிர் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற குறித்த சந்தேகநபர்கள், அண்மையில் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது,…
-
யாழில் அதிகாலையில் பயங்கரம்; பொலிஸாரின் துப்பாக்கிசூட்டில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி வழியாக இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் கட்டளையிட்டுள்ளனர்.எனினும், கட்டளையை மீறி குறித்த வாகனம் மண்டைத்தீவு நோக்கி பயணித்துள்ளது. இதன்போது, மண்டைத்தீவு பகுதியில் கடமையில்…
-
யாழ் மருதனார்மட சந்தைக்கு துப்பாகியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு

யாழ்ப்பாணம், மருதனார்மட சந்தைக்கு இன்று (10) காலை 06.03 மணிக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வருகை தந்த நபர் தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. கையில் கொண்டு வந்த…
-
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்துகுள்ளாகியுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.…
-
யாழ் நீதிமன்றத்தில் பொலிஸ் கன்னத்தில் செருப்பால் அடித்த பெண்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது குழந்தையை, அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நீதிமன்றக் கட்டளையினால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கி மோதுதலில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ்…
-
யாழ்ப்பாணத்தில் முதியவரின் உயிரை பறித்த ராணுவ வாகனம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்க வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-
வல்வெட்டித்துறையில் புலிகளின் தலைவரின் வீடு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான தலைவர் பிரபாகரனின் சகோதரிக்கு அறிவுறுத்த வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானித்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த அமர்வு, அண்மையில் நகர பிதா எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு, காணியின் உரிமையாளரான பிரபாகரனின் சகோதரி ம.ஜெகதீஸ்வரி முன்வைத்த கோரிக்கை…
-
யாழ் . போதனா வைத்தியசாலையில் சிறுமியை கைது துண்டிப்பு; பொலிஸார் மீது நீதிம்ன்றம் கடும் அதிருப்தி

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. பொலிசரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கினை குற்ற புலனாய்வு துறையினருக்கு பரப்படுத்த நேரும் எனவும் பொலிஸாருக்கு மன்று அறிவுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி (கணூலா…