Tag: Jaffna

  • யாழில் தந்தையின் பல லட்சம் பணத்தை களவாடிய பதின்ம வயது மகள்

    யாழில் தந்தையின் பல லட்சம் பணத்தை களவாடிய பதின்ம வயது மகள்

    யாழில் வர்த்தகரான தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை அவரது கைத் தொலைபேசியைப் பயன்படுத்தி 17 வயதான மாணவி, நண்பிக்கு பணப்பரிமாற்றம் செய்த சம்பவத்தால் தந்தை ஆடிப்போயுள்ளார் . அண்மையில் யாழ்ப்பாண வங்கி ஒன்றிற்கு வர்த்தகர் ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 லட்சம் ரூபா பணம் தனக்கு தெரியாது மாற்றப்பட்டுள்ளதாக வங்கிக்கு வந்து முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தீர விசாரணை செய்த வங்கி நிர்வாகம், பணம் மாற்றப்பட்டது கைத் தொலைபேசி அப் மூலமே என்றும்,…

  • யாழில் ஓட ஓட இளைஞன் வெட்டிக்கொலை; சிறையில் போட்ட திட்டம்; ஆறு பேர் கைது

    யாழில் ஓட ஓட இளைஞன் வெட்டிக்கொலை; சிறையில் போட்ட திட்டம்;  ஆறு பேர் கைது

    யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வானில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. நீண்ட…

  • யாழில் ஓட ஓட வெட்டிகொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் வியாபாரியா?

    யாழில் ஓட ஓட வெட்டிகொலை செய்யப்பட்டவர் போதைப்பொருள் வியாபாரியா?

    யாழ் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அற்புதாஸ் கடைக்கு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் நேசராசா ரஜீவ் (35) என தெரியவருகின்றது. குறித்த போதைப்பொரு்ள் வியாபாரியின் மனைவியான நதியாவே முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரி எனவும், 3வது புருசனே வெட்டிக் கொலை செய்யப்பட்டவனாவான். இவனும் இவனது மனைவியும் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்தமையை தட்டிக் கேட்ட சிலரை பொலிசாரின் உதவியுடன் இவர்கள் சிறைக்கு அனுப்பியுள்ளார்கள் என தகவல்களை சேகரிக்கச் சென்றவர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். யாழ் கொக்குவில் ரயில் நிலையத்திற்கு…

  • வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் சென்ற யாழ் இளைஞன் உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்

    வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் சென்ற யாழ் இளைஞன் உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்

    யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி…

  • மாவீரர் தினத்தினை முன்னிட்டு முடங்கியது யாழ்ப்பாணம்

    மாவீரர் தினத்தினை முன்னிட்டு முடங்கியது யாழ்ப்பாணம்

    மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பானம் . தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டுள்ளன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும் , மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் தென்மராட்சியில் நடைபெற்றது. தென்மராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் , ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி…

  • யாழில் பிரான்ஸ் இளைஞன் கொலையில் அம்பாறை இளைஞர்கள் கைது

    யாழில்  பிரான்ஸ் இளைஞன் கொலையில் அம்பாறை இளைஞர்கள் கைது

    பிரான்ஸிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில், அம்பாறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்கள் அம்பாறைப் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட…

  • யாழில் காதலன் வீட்டில் திருடி மாட்டிய கிளிநொச்சி யுவதி

    யாழில் காதலன் வீட்டில் திருடி மாட்டிய கிளிநொச்சி யுவதி

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்தது. இந்நிலையில் காதலி அண்மைய நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 5 ஆம் திகதி காதலனின் வீட்டில் காதலனின் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட்ட…

  • யாழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

    யாழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகள் , சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு , பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு , வெடி கொளுத்தி  பெரியளவிலான கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ,…

  • யாழில் பாம்பு தீண்டியபோதும் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன்

    யாழில் பாம்பு தீண்டியபோதும் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன்

    யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இராசயணவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப்…

  • யாழில் காதல் கை கூடாததால் மாணவி உயிர் மாய்ப்பு

    யாழில் காதல் கை கூடாததால் மாணவி உயிர் மாய்ப்பு

    யாழ்ப்பாணம், வட்டுக்கோடை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் காதல் உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக நேற்று (24) உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் வட்டுக்கோடை முல்லை ஆலடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையில் முறிவு ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி குறித்த மாணவி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத…