Tag: Jaffna

  • யாழில் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு பெண் உயிரிழப்பு

    யாழில் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு பெண் உயிரிழப்பு

    யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெண் மன அழுத்தம் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் உட்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

  • யாழில் உறவினர் வீட்டில் உயிர் மாய்த்த நபர்

    யாழில் உறவினர் வீட்டில் உயிர் மாய்த்த நபர்

    யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவர் நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்களின் அறிவிப்பின் பேரில் அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அவரது சடலம் மீதான…

  • செம்மணி அணையா விளக்கை உடைத்த விசமிகளுக்கு சாட்டையடி

    செம்மணி அணையா விளக்கை உடைத்த விசமிகளுக்கு சாட்டையடி

    யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அணையா விளக்கு மீள நேற்று மாலை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டிருந்த அணையா விளக்கு இன்று மாலையில் மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி முன்னதாக இடித்தளிக்கப்பட்டிருந்தது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில்; ”அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட…

  • யாழ் போதனாவில் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

    யாழ் போதனாவில் மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

  • யாழ்ப்பாணம் அரியாலையில் பொலிஸார் அடாவடி

    யாழ்ப்பாணம் அரியாலையில் பொலிஸார் அடாவடி

    யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்டார்கள் என குற்றம் சாட்டி 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் நேற்று புதன்கிழமை (08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (09) நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனத்தில் குறித்த இடத்திற்கு கழிவுகளை கொண்டு வந்த…

  • யாழில் புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள்

    யாழில் புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள்

    யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள் கைது வேட்டை யாழில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கைதினை மடைமாற்ற நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர். ஆவர்களிற்கு ஆதரவாக வடக்கின் ஏனைய மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நில மோசடி…

  • யாழில் காணி உறுதியில் மோசடி ; பெண் சட்டத்தரணியின் திருட்டு அம்பலம்

    யாழில் காணி உறுதியில் மோசடி ; பெண் சட்டத்தரணியின் திருட்டு அம்பலம்

    யாழ்ப்பாணத்தில் முறை யற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று யாழ்ப் பாணம் மாவட்ட நிதி சார் குற்றத்தடுப்புப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடு விக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் காணிஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசா ரணைகளின் அடிப்படையில் குறித்த காணியின் உறுதி முடிப்பை நிறை வேற்றிய பெண் சட்டத்தரணி நேற்றுத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சட்டத் தரணியை…

  • யாழ்ப்பாணத்தில் மிக்ஸருக்காக இடம்பெற்ற கொலை

    யாழ்ப்பாணத்தில் மிக்ஸருக்காக இடம்பெற்ற கொலை

    யாழ்ப்பாணத்தில் பல்பொருள் வாணிப நிலையத்தில் நிறை மது போதையில் சென்ற இருவர் உரிமையாளருடன் முரண்பட்டு , கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கை சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள பல்பொருள் வாணிப நிலையம் ஒன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை…

  • அருச்சுனா எம்பியும் விரைவில் கம்பி எண்ணுவார்!

    அருச்சுனா எம்பியும் விரைவில் கம்பி எண்ணுவார்!

    கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர். ஊழலை ஒழிக்க போகிறேன் என சாவகச்சேரியில் இருந்து…

  • திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் ; சி.வீ.கே. காட்டம்

    திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் ; சி.வீ.கே. காட்டம்

    தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சிகளிடம் அமைப்புக்களிடம் கோரிக்கை முன்வைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு…