-
யாழ்ப்பாணம் வந்து பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேணும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு கோரி ஒருவர் யாசகம் பெற்றுள்ளார். யாழில் நிலவும் கடுமையான வெப்பமான காலநிலையில் , வெயிலுக்குள் சிறுமியை சக்கர…
-
யாழில் 15 வயது மாணவி குழந்தை பெற காரணமாக தாயின் நண்பன்; பகீர் தகவல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் துன்னாலை மேற்கை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் மாலைப்பொழுதொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக்கு உதவியாக நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள் காலையில், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து, அது…
-
யாழில் அரச உத்தியோகத்தரின் முத்திரையை பயன்படுத்தி 17 இலட்சம் மோசடி

யாழ்ப்பாணம், கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார். 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த…
-
தந்தை பிரித்தானியாவில் ….யாழ்ப்பாண மாணவி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் , நீர்கொழும்பு பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி வியாபாரிமூலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவில் தந்தை வசித்து வரும் நிலையில் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பரீட்சை முடிந்த மாணவி, யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் அதிகநேரம் தொலைபேசி உரையாடுவதை தாயார் கண்டித்ததால் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை…
-
யாழ் இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளனர். குறித்த வீடானது ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் ஆய்வுகூடமாக செயற்பட்டு…
-
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச சிலம்பம் போட்டி..!

யாழ்ப்பாணத்தில் ஐந்து நாடுகள் பங்குபெறும் சர்வதேச சிரமம் போட்டியானது இன்று நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் யாழ் துறையப்பா விளையாட்டு அரங்கில் ஆரம்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவலீமன் சிலம்ப சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் நடைபெறும் சர்வதேச சிலம்பப் போட்டி. மேலும் இந்த சர்வதேச சிலம்பப் போட்டி சிவலீமன் சங்கத்தின் தலைவர் யசோதரன் தலைமையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இந்த சர்வதேச சிலம்பப் போட்டியானது இந்தியா, இலங்கை, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய…