Tag: Kandy

  • கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

    கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

    கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கையை அடுத்து மாவட்ட செயலகத்திற்கு சேவைகளைப் பெற வந்த மக்கள் மாவட்ட செயலகத்தை விட்டு வெளியேறவோ அல்லது வளாகத்திற்குள் நுழையவோ அனுமதிக்கப்படவில்லை என்பதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

  • தகாத உறவு; மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை

    தகாத உறவு; மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை

    கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த பெண் , நபர் ஒருவருடன் கம்பளை – புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 9 மாத காலமாக…

  • தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு

    தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு

    கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (05) மாலை இடம்பெற்றுள்ளது. கலகெதர – மினிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். பெண் அரச உத்தியோகத்தர் கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில்…

  • கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் மரணம், 420 பேர் மருத்துவமனையில்

    கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் மரணம், 420 பேர் மருத்துவமனையில்

    கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண்மணி முச்சக்கரவண்டியொன்று மோதியதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்கள் குளியாப்பிட்டிய, பண்டாரகம, கலிகமுவ மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அம்பிட்டிய பகுதியில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் ஆணொருவரும், கட்டுக்கஸ்தோட்டை நகருக்கு அருகில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். இதற்கிடையில், கண்டி போதனா வைத்தியசாலையில், கடந்த சில தினங்களில்…

  • தகாத உறவு – மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த கணவன்

    தகாத உறவு – மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த கணவன்

    மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) சூடு பண்ணி 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். படும் மோசமான இந்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது என ஹத்தரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது மனைவியின் தகாத உறவு குறித்து அறிந்து கொண்ட கணவன், மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயங்களுக்கு உள்ளான பேராதனை போதனா…

  • சொகுசு வீடு விபச்சார விடுதியில் சிக்கிய அழகிகள்

    சொகுசு வீடு விபச்சார விடுதியில் சிக்கிய அழகிகள்

    சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றது. கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேக நபர்களை…

  • குரங்குகளை தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

    குரங்குகளை தீவில் விட 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

    நாட்டில் விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை அண்மித்த தீவுப் பகுதியில் மேற்படி குரங்குகள் கொண்டு போய் விடப்படவுள்ளன. இதற்காக…

  • நிர்வாண கோலத்தில் உந்துருளியில் பயணித்த நபர்

    நிர்வாண கோலத்தில் உந்துருளியில் பயணித்த நபர்

    கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் உந்துருளியில் பயணித்த நபரொருவரை திங்கட்கிழமை (3) காலை கடுகண்ணாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பு – கண்டி வீதியில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த நபரை இடைமறித்துப் பிடிக்க கேகாலை, மாவனெல்ல முதலான பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறையினர் கடுமையாக முயற்சித்தும் அந்த நபரை பிடிக்க முடியாமற்போன நிலையில், கடுகண்ணாவை காவல்துறையினர் வீதித் தடைகளை…

  • மனைவியை கொன்று பொலிஸில் சரணடைந்த கணவன்

    மனைவியை கொன்று பொலிஸில் சரணடைந்த கணவன்

    தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (04) சரணடைந்த ஒருவர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கணவனுடன் அடிக்கடி ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். திங்கட்கிழமை…

  • இரவு வேளைகளில் மூடப்படும் கண்டி – மஹியங்கனை வீதி!

    இரவு வேளைகளில் மூடப்படும் கண்டி – மஹியங்கனை வீதி!

    கண்டி – மஹியங்கனை வீதி இன்றையதினம் (21-01-2025) மாலை 6:00 மணி முதல் இரவு வேளைகளில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.