Tag: Kerala

  • கேரளா நடிகை கைது

    கேரளா நடிகை  கைது

    14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி 4 பேர் அத்து மீறியுள்ளனர். இது தொடர்பாக அந்த சிறுமி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகையை திருமங்கலம் அழைத்து வந்து விசாரிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது நடிகை மினு கேரளாவில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் தொடர்பாக…

  • ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலை ; கேரளாவில் பரபரப்பு

    ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலை ; கேரளாவில் பரபரப்பு

    ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் காவல்நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்கிக் கிடப்பதாகக் கூறியுள்ளார். அதன்படி, போலீஸார் அங்குசென்று விசாரணை நடத்தியதில் அது மாதிரப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த அன்ஸில் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் அவர் தனக்கு அதீனா ஜூஸில்…

  • நிமிஷா பிரியா மரண தண்டனை இரத்தா?

    நிமிஷா பிரியா மரண தண்டனை இரத்தா?

    ஏமனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2017ஆம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த ஏமன் நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு அவரை கொலைக் குற்றவாளியாக அறிவித்து மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற முஸ்லிம்…

  • யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 350 கிலோ கேரள கஞ்சா

    யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 350 கிலோ கேரள கஞ்சா

    யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதோடு, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் பகுதியில் இடை மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது 150…

  • காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள யுவதிக்கு மரண தண்டனை

    காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள யுவதிக்கு மரண தண்டனை

    கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞர் அருந்திய குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞனின் காதலி உட்பட மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்குகளின்…

  • கட்டுநாயக்க வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

    கட்டுநாயக்க வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

    கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது. விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதன்படி, துபாயிலிருந்து பயணித்த UL-226 விமானமும் சீனாவிலிருந்து பயணித்த UL-881 விமானமும் இந்தியாவின் பெங்களூரிலிருந்து பயணித்த…

  • அபுதாபியில் இருந்து திருவனந்தபுரம் திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மைநோய் தொற்று!

    அபுதாபியில் இருந்து திருவனந்தபுரம் திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மைநோய் தொற்று!

    கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய போது குரங்கம்மைநோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வகையான அம்மை தொற்றாகும் இது ஆப்பிரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்கு ஒன்றின் வைரஸ் மாதிரியில் இருந்து எடுக்கப்பட்டதனால் இதற்கு குரங்கம்மை என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த வைரஸ் கிருமிகள் மனித உடலுக்குள் நோய் தொற்றாக உருவெடுக்கும் பொழுது குரங்கமை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் தலைவலி மற்றும் சரும கொப்பளங்கள் உணர்வார்கள்…

  • கேரள கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பலர் காயம்

    கேரள கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பலர் காயம்

    கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்திருந்தன. கேரளாவில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு அனுசரிக்கப்படுகிறது. அந்தச் சடங்கின்போது இப்பட்டாசு விபத்து நிகழ்ந்ததாகக் கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு நேரத்தில்…

  • இட்லி உண்ணும் போட்டியில் உயிரை விட்ட நபர்

    இட்லி உண்ணும் போட்டியில் உயிரை விட்ட நபர்

    கேரளாவில் இட்லி உண்ணும் போட்டியில் முதியவர் உயிரிழந்துள்ளார். மலையாளிகளின் முக்கிய திருவிழாவான ஓணம் கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணத்தை முன்னிட்டு கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. அதிக இட்லி உண்பவர்க்கு ரூ.5000 பரிசு தொகை என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் சுரேஷ் என்ற 50 வயது முதியவர் பங்கேற்றுள்ளார். வெற்றி பெற வேண்டுமென அவசரமாக 3 இட்லியை ஒன்றாக முழுங்க முயற்சித்துள்ளார். ஆனால் இட்லி தொண்டையில் சிக்கி மூச்சு…

  • பாலியல் குற்றச்சாட்டு – கூண்டோடு கலைக்கப்பட்ட மலையாள நடிகர் சங்கம்!

    பாலியல் குற்றச்சாட்டு – கூண்டோடு கலைக்கப்பட்ட  மலையாள நடிகர் சங்கம்!

    கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் இராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்ந்து அச்சங்கத்தின் 17 நிர்வாகிகளும் இராஜினாமா செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக கேரள அரசு நியமித்த குழு அறிக்கை அளித்துள்ளது. இதேவேளை மலையாள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.