-
வயநாட்டில் மரண ஓலம் ; 171 பேர் பலி; 225 பேர் மாயம்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவில் சிக்கி பல்ர் காணாம்ல்போயுள்ள நிலையில் இரண்டாம் நாளாக இன்று (புதன்கிழமை) நடைபெறும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முண்டக்கை பகுதியில் சிக்கிக் கொண்டு இரண்டு தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த 19 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாலையாற்றில் 15 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன. அதேவேளை நிலச்சரிவில் மாயமானவர்கள் 225…
-
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் இரங்கல்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில்…
-
கேரளாவில் இதுவரை 50 பேர் உயிரிழப்பு… மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து 4.30 மணிக்கு மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நேர்ந்த நிலச்சரிவினால் வெள்ளேரிமலை,…
-
கேரளாவில் சுகாதார அவசரநிலை

கேரளாவில் சுகாதார அவசர நிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் 60 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ் தொற்றில் இருந்து விடுபட, நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணியுமாறும் சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
-
கேரளா மாநிலத்தில் காகங்களுக்கு பறவை காய்ச்சல்

கேரளா மாநிலத்தில் முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறவை காய்ச்சல் தாக்கம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. பறவை காய்ச்சல் மனிதர்களை தாக்காது என கருதப்பட்டு…
-
காருக்குள் நீச்சலடித்த பிரபல யூடியூபருக்கு பொலிஸார் வைத்த ஆப்பு

இந்தியாவின் கேரளாவில் உள்ள ஆலப்புழாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர், முறையற்ற செயல் காரணமாக அவரது ஓட்டுநர் உரிமத்தை கேரள மாநில காவல்துறை ரத்து செய்துள்ளது. நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘ஆவேசம்’ போன்று, குறித்த நபர் தனது காரில் சிறிய நீச்சல் குளம் அமைத்து, தனது நண்பர்களுடன் குளித்துக்கொண்டே சாலையில் காரை ஓட்டி வந்துள்ளார். அக் காட்சிகளையும் யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த போது,…
-
பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிப்பு!

குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ஏமன் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட ‘குழிமந்தி பிரியாணி’ மிகவும் பிரபலமான உணவாக உள்ளது. இதனை அம்மாநிலத்தில் பலர் விரும்பி சாப்பிடுவதால் ஏராளமான அசைவ ஓட்டல்களில் இந்த பிரியாணி விற்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சூர் கொடுங்கல்லூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் ‘குழிமந்தி பிரியாணி’ சாப்பிட்ட 85 பேருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு திடீரென வாந்தி,…

