-
அடுத்தடுத்து கைது ; ஓட்டமெடுக்கும் பிள்ளையான் கும்பல்

பிள்ளையான் சாகாவான இனியபாரதியின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, மற்றுமொரு நபரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த 12 அம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன்…
-
மன்னாரில் மக்கள் மத்தியில் அச்சம்; ஓடும் பேருந்தில் கடத்தப்பட்ட நபர்

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் வந்த நபர்கள் குறித்த நபரை கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், குறித்த கடத்தல் சம்பவம் நேற்றைய தினம் (31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளியும்…
-
NPP இன் இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சபை அமர்வை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
சினிமாப்பாணியில் காதலனை தாக்கி யுவதியை கடத்தி சென்ற கும்பல்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் வைத்து, புதன்கிழமை (22) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார்…
-
கடத்தலில் ஈடுபட்ட யாழ் நபர் கட்டுநாயக்காவில் கைது

ஒருவரைக் கடத்திச் சென்று அவரிடமிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (16) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 27 வயதுடையவர். பெப்ரவரி 8 ஆம் திகதி யாழ்.ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.478 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். அதன்படி, குற்றச்…
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்.
-
கிளிநொச்சி ஊடகவியலாளரை வானில் கடத்த முயற்சி; மீண்டும் அச்சுறுத்தல்

கிளிநொச்சி ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஊடக அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீது கிளிநொச்சி நகரில் தாக்குதல் நடத்தி வானில் கடத்தும் முயற்சியொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார். கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் செல்வனை பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் வழிமறித்து அவ்வாறு கடத்தலை முன்னெடுக்க…
-
வவுனியாவில் குடும்ப பெண் கடத்தலை முறியடித்த பொலிஸார்

வவுனியாவில் இருந்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதுடன் வேனுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவரை யாழ்ப்பாணத்தில் இருந்து வேன் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் மாமியார் பெண்ணை தூக்கிச் சென்றவர்களை விரட்டிய போது அவரை உதைந்து விட்டு சென்றுள்ளனர். இதன்பின் மாமியார் வவுனியா தலைமைப் பொலிசிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு…
-
வாகரையில் சிறுவனை கடத்தியவரை நையப்புடைத்த மக்கள்

நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச மக்கள் சிறுவனை மீட்டதுடன் கடத்திய நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (17) அதிகாலை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. வாகரை 5ம் வட்டாரத்தைச் சோந்த 5 வயதுடைய சிறுவன், தாய் தந்தையுடன் நித்திரையில் இருந்த நிலையில், சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த சிறுவன் பால் கேட்டதையடுத்து தாயார் தந்தைக்கு பக்கத்தில்…
-
பையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்; சம்பவத்தால் பரபரப்பு

தமிழகத்தில் பெண் ஒருவர் பையில் குழந்தை ஒன்றை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிவருகையில், தமிழகம் வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியில் தொழிலாளியாக இருப்பவர் கோவிந்தன், 25. இவரது மனைவி சின்னி. பிரசவத்துக்காக சின்னி ஜூலை 27ஆம் தேதி இரவு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதே நாள் இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் பிரசவ வாா்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்தாா். அதன் பின் குழந்தைநல…