Tag: Kovil

  • வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்ம மரணம்

    வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்ம மரணம்

    மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராக வும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது. சடலத்தை…

  • கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய பெண்

    கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய பெண்

    நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கோவில் ஒன்றில் உண்டியலை உடைத்து 1300 ரூபா திருடிய பெண், பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். சாமி சிலைகள், விளக்குகள் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து உண்டியலில் இருந்த பணம் என்பவற்றை களவாடி இவர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார். மக்களால் பிடிக்கப்பட்ட அவர், நானுஒயா பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் (17) ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்ததும் நீதிபதி அப்பெண்ணை எதிர்வரும் 27ஆம் திகதிவரை…

  • யாழ் பிரபல ஆலயத்தில் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்

    யாழ் பிரபல ஆலயத்தில் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்

    யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா ஓகஸ்ட் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஏழாம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) நடைபெற்றது. இதன்போது, முருகனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் இடையே நடைபெற்ற உலகைச் சுற்றி முதலில் வலம் வருபவருக்கு மாம்பழம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முருகப் பெருமான் மயில் வாகனத்தில்…

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பத்து ரூபா தானமாக கொடுத்த பெண்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பத்து ரூபா தானமாக கொடுத்த பெண்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். ரியல் வாழ்க்கையில் சாதாரண தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், பெங்களூருவில் மாறுவேடத்தில் சென்ற அனுபவம் பற்றிய ஒரு தகவலை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில், ஒருமுறை மாறுவேடத்தில் பெங்களூருவில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்றேன். அப்போது ஒரு பெண் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் யாசகம் பெறுபவர் என்று நினைத்த அப்பெண் என்னிடம் உடனடியாக பத்து ரூபாயை தர்மமாக கொடுத்தார். பதிலுக்கு எதுவும் கூறாமல், நான்…

  • முல்லைத்தீவில் தூக்குக்காவடி தடம்புரண்டு இருவர் காயம்

    முல்லைத்தீவில் தூக்குக்காவடி தடம்புரண்டு இருவர் காயம்

    முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு தூக்குகாவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவு இயந்திரப்பெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் உள்ள கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு திங்கட்கிழமை (14) இடம்பெற்றது. குறித்த ஆலய தூக்குக்காவடி நேர்த்திகடனை நிறைவேற்ற குமுழமுனை கற்பக பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச்…

  • யாழ்ப்பாணத்தில் பாம்பை பிடிக்க நினைத்த குருக்களை பலியெடுத்த பாம்பு

    யாழ்ப்பாணத்தில் பாம்பை பிடிக்க நினைத்த குருக்களை பலியெடுத்த பாம்பு

    யாழ்ப்பாணத்தில் குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார். இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது…

  • தீர்த்த திருவிழாவிற்கு சென்றவர் சடலமாக மீட்பு

    தீர்த்த திருவிழாவிற்கு சென்றவர் சடலமாக மீட்பு

    கிளிநொச்சி, கண்டாவளை பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (29​) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார், பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் அப்பகுதியில் நடைபெற்ற ஆலயத் தீர்த்த திருவிழாவிற்கு சென்று, குளத்துக்கு குளிக்கச் செல்வதாக கூறி குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த போதும்…

  • ஜோதிடர் கூறியதை கேட்டு கோயில் முன்பு குவிந்த மக்கள்

    ஜோதிடர் கூறியதை கேட்டு கோயில் முன்பு குவிந்த மக்கள்

    யூடியூப் ஜோதிடர் ஒருவர் கூறியதை கேட்டு கோயில் முன்பு மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தற்போது மார்கழி மாதம் நரசிம்மர் கோயிலில் தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைப்பெறுவது வழக்கம். இந்த நிலையில், மார்கழி முதல் நாள் தொடங்கி நரசிம்மர் கோவிலில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு அதிகாலை…

  • யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து கொள்ளை

    யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து கொள்ளை

    யாழ். கைதடியில் ஆலயப் பூசகரைக் கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ – 9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும், 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத்…

  • கனடாவில் சூரசம்ஹார நிகழ்வில் குருக்களுக்கு நேர்ந்த கதி!

    கனடாவில் சூரசம்ஹார நிகழ்வில் குருக்களுக்கு நேர்ந்த கதி!

    கனடா – டொர்ன்டோ நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முன் தினம் , இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று…