-
கேரள கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பலர் காயம்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது. இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்திருந்தன. கேரளாவில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு அனுசரிக்கப்படுகிறது. அந்தச் சடங்கின்போது இப்பட்டாசு விபத்து நிகழ்ந்ததாகக் கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு நேரத்தில்…
-
யாழில் ஆலயம் ஒன்றுக்கு மின் இணைப்புக்களை வழங்கியவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் வெள்ளிக்கிழமை (18) ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனல தீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின் இணைப்புக்களை வழங்கிய வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. ஆலயத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருட்டு

வங்காளதேசத்தில் உள்ள காளி தேவி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம் திருடப்பட்டுள்ளது. டாக்கா, வங்காளதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி பிரதமர் மோடி தனது வங்காளதேச சுற்றுப்பயணத்தின்போது இந்த கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது அவர்…
-
யாழ்ப்பாணத்தில் கடவுளின் நகையை திருடிய பூசகர்! காட்டிக்கொடுத்த விநாயகர்

யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதாகிய பூசகரிடம் இருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா பணம் என்பன பெட்டகம் உடைக்கப்படாத நிலையில் காணாமல் போயிருந்தன. போலி சாவியை பயன்படுத்தி நகைகள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் கடந்த…
-
யாழ்ப்பாண மிக்ஸரில் பொரித்த பல்லி

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு…
-
யாழ் பிரபல முருகன்ஆலய கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
யாழ் பிரபல ஆலயத்தில் சுமார் 17 இலட்சம் ரூபா கையாடல்!

யாழ்ப்பாணம், கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார். 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த…