Tag: Lohan Ratwatte

  • மஹிந்த கட்சியின் முன்னாள் எ.பி லொகான் ரத்வத்த மரணம்

    மஹிந்த கட்சியின் முன்னாள் எ.பி லொகான் ரத்வத்த மரணம்

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த (வயது 57) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • லொஹான் ரத்வத்தவிற்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு!

    லொஹான் ரத்வத்தவிற்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு!

    சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரொன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி…

  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்!

    முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்!

    கண்டியில் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கண்டியில் முதலில் கைது செய்யப்பட்ட ரத்வத்த, இன்று (31) மாலை நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் முன்னாள்…

  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் வாகனம் விபத்து!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் வாகனம் விபத்து!

    வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதெனிய – அனுராதபுரம் வீதியில் தங்கஹமுல சந்தியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கும் வாகனத்தில் இருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு சிறிது நேரத்தில் உடல் தகராறாக மாறியது, இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், வாகனத்திற்குள் பல ஆயுதங்கள் காணப்பட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டி, மேலும் கவலைகளை அதிகரித்து, சட்ட அமலாக்கத்தின் கவனத்தை…