-
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திமணமாகி ஒரு வருடத்தில் துயரம்

லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இத துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும்…
-
ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தயில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.…
-
லண்டனில் கறுப்பு யூலை ஆர்பாட்டம்!

இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கன மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழின அழிப்பின் ஆவண நிழற் படங்களும் காட்ச்சிப்படுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.
-
தூங்கும் இளவரசர் என அழைக்கப்பட்டவர் மரணம்

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை (19) காலமானார். பிரித்தானிய நாட்டின் லண்டன் நகரில் இராணுவ பயிற்சிக்காக படித்து வந்த அவர், 2005 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கினார். இதில், காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
-
லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது. விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு மதியம் 1:10 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
உலகை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து; உயிர் பிழைத்தவரின் பகீர் அனுபவம்!

இந்தியா ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் (போயிங் 787) (AI-171) லண்டனுக்கு புறப்பட்ட நிறு நொடியில் விபத்துக்குள்ளானது. 242 பேருடன் பயணித்த விமான விபத்தில் அதில் பயணித்த ஒருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளமை இந்தியாவை மட்டுமல்லாது உலகையே உலுக்குயுள்ளது. விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் இதுதொடர்பாக செய்தியாளரிடம் தனது கொடூரமான அனுபத்தை பகிர்ந்து கொண்ட அவர் கூறியதாவது, எல்லாம் என் கண்முன்னே நடந்தது. நான் உயிருடன் தப்பித்ததை…
-
பாரிய தீ விபத்தால் மூடப்பட்ட ஹீத்ரோ விமான நிலையம்!

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக விமான நிலையம் குறிப்பிடத்தக்க மின் தடையை சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் அறிக்கை தெரிவித்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் ஹீத்ரோ விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான…
-
இசை மழையில் நனைந்தது லண்டன்; இளையராஜாவின் சிம்பொனியை மெய்மறந்து ரசித்த ரசிகர்கள்!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை மழையில் நனைந்தது லண்டன் நகரம். அண்மையில் லண்டனில் நடைபெற்ற அவரது சிம்பொனி இசை நிகழ்ச்சியில், ரசிகர்கள் மெய்மறந்து இசையை அனுபவித்தனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்: இசை மழை: இளையராஜாவின் சிம்பொனி இசை, பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை அளித்தது. ரசிகர்கள்: நிகழ்ச்சியில் பல்வேறு வயதினரும், பல்வேறு நாடுகளிலிருந்து வந்த ரசிகர்கள் கலந்து கொண்டு, இசையின் மாயத்தில் மூழ்கினர். நகரத்தின் பதில்: லண்டன் நகரம்,…
-
U.K லிவர்பூலில் ஈழத்தமிழ் இளம் தாய் உயிரிழந்த சோகம்

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் புறநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான, 28 வயதான இளம் குடும்ப பெண்னே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 25 அன்று உள்ள தனது வீட்டில் நண்டு கறி சாப்பிட்ட பின்னர் உணவு ஒவ்வாமை காரணமாக பெண் உயிரிழந்துள்ளார் .…
-
லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன் ஈழத் தமிழர்கள் போராட்டம்

பிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை போராட்டம் நடந்தது. அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் இப்போராட்டம் அனைத்துலக தொடர்பகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.