Tag: mannanr

  • கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.