-
ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் 180 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மன்னார் வாசிகள்

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும்…
-
மன்னாரில் பொலிஸ் காவலில் இருந்தவர் அடித்துக் கொலை

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். அந்நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தடுப்பு காவலில்…
-
கடலில் தத்தளித்த இலங்கை குடும்பம் மீட்பு

தலைமன்னார் கடற்பகுதியில் மனித கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு வந்தவர்கள் வவுனியா, மடு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 8 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடற்படையினரின் காவலில் எடுக்கப்பட்டபோது அவர்கள் நீரிழப்பு மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு தலைமன்னார் காவல்துறையினரிடம்…
-
காதலனை கரம் பிடிக்க கடல் தாண்டி இலங்கை காதலி ஓட்டம்

காதலனை கரம் பிடிப்பதற்காக இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படகில் கடல் தாண்டி தனுஷ்கோடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவர் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இளம்பெண் ஒருவர் வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கை மன்னார் ஆண்ட குளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா என்ற குறித்த…
-
மன்னாரில் மக்கள் மத்தியில் அச்சம்; ஓடும் பேருந்தில் கடத்தப்பட்ட நபர்

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் வந்த நபர்கள் குறித்த நபரை கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், குறித்த கடத்தல் சம்பவம் நேற்றைய தினம் (31) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளியும்…
-
தந்தை செல்வாவின் சிலை உடைப்பு

மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை புதன்கிழமை (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின், மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில்…
-
நீதிமன்றத்தை அவமதித்த பெண் சட்டத்தரணியை விடுவிக்க உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு புத்தளம் மேல் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணியை உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், சட்டத்தரணி விடுதலையான பிறகு ஏப்ரல் 28 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்…
-
மன்னார் நீதிமன்ற துப்பாக்கி சூடு ;சம்பவத்துடன் தொடர்புடையவர் யாழில் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொருவர் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை, ஜனவரி 16ஆம் திகதி வியாழக்கிழமை (16)…
-
மன்னாரில் துப்பாக்கி சூடு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், புதன்கிழமை(29) கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சந்தேக நபரை வியாழக்கிழமை (30) வரை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.…
-
மன்னார் இரட்டைக் கொலை ; முக்கிய சந்தேக நபர் ஒரு ராணுவ சிப்பாய்!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேரைக் கொன்று, இருவரைப் படுகாயத்திற்குள்ளாக்கிய சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் இராணுவ வீரர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் சீதுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும்,…