-
திரைப்படமாகும் மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப் பயணம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி, அதனூடாகத் தமது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்குமே முயற்சித்துவருகின்றது. ஆகையினால்தான் அரசாங்கம் உரிய தொழிற்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமல்,…
-
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் 116 பேர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பொலிஸ் அதிகாரிகள் அதிலிருந்து நீக்கப்பட்டு பொலிஸ் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 67 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த ஏனையவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்களின் எண்ணிக்கை 57 ஆகவும், மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்களின்…