-
இலங்கை நாடாளுமன்றில் மலையாள சினிமா சூப்பர் ஸ்டார்

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார். படப்படிப்பு ஒன்றுக்காக நடிகர் மோகன்லால் சமீபத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நிலையில், இன்று (19) இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார். சமீப காலமாக பல்வேறு தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
-
இலங்கையில் பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில் மற்றும் மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள மல்டி ஸ்டாரர் படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை மாலிக் புகழ் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் மம்மூட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இணையவுள்ளனர். கடைசியாக…
-
பாலியல் குற்றச்சாட்டு – கூண்டோடு கலைக்கப்பட்ட மலையாள நடிகர் சங்கம்!

கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் இராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்ந்து அச்சங்கத்தின் 17 நிர்வாகிகளும் இராஜினாமா செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக கேரள அரசு நியமித்த குழு அறிக்கை அளித்துள்ளது. இதேவேளை மலையாள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.
