-
தென் கொரியா பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியை

தென் கொரியாவின் டேஜியான் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் 8 வயது மாணவியைக் கொலை செய்த வழக்கில், ஆசிரியையான மையாங் ஜே வான் (Myang Jae Wan) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தென் கொரியாவை உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாக 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. டேஜியானைச் சேர்ந்த மையாங் ஜே வான் (வயது 48) என்ற ஆசிரியை, கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பறையில் வைத்து 8 வயது சிறுமியைக்…
-
இஷாராவால் கிளிநொச்சிக்கு படையெடுக்கும் அதிகாரிகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் விசாரணையில் வெளிட்டு வருகின்றார். மேலும், கொலைக்குப்பின் இவருக்கு உதவிய பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொலைக்குப்பின் செவ்வந்தி பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கமைய கடந்த சனிக்கிழமை (18) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி, அந்தப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு…
-
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பெண்கொலையில் நகைகளுடன் சிக்கிய குற்றவாளிகள்..!

பூநகரி, சங்குப்பிட்டி பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக #கொலை செய்யப்பட்டு #கடலுக்குள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் உதவியாளரும் பூநகரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பூநகரி வீதியில் 18 ஆவது மைல்கல் அருகில் கடந்த 12 ஆம் திகதி பெண் ஒருவரின் #சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி…
-
இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் விடயத்தில் தடுப்புக்காவல் உத்தரவுகள்

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும்…
-
யாழ் சங்குபிட்டி பாலத்தில் அரங்கேறிய கொடூரம்

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரிய கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந் நிலையில் , யாழ் . போதனா…
-
இளம் தம்பதி வெட்டிக் கொலை

ஹூங்கம – வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தம்பதியினர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார்…
-
யாழ்ப்பாணத்தில் மிக்ஸருக்காக இடம்பெற்ற கொலை

யாழ்ப்பாணத்தில் பல்பொருள் வாணிப நிலையத்தில் நிறை மது போதையில் சென்ற இருவர் உரிமையாளருடன் முரண்பட்டு , கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கை சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள பல்பொருள் வாணிப நிலையம் ஒன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை…
-
மீரிகம பகுதியில் பயங்கரம்; குடும்ப பெண் கொலை

மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடைபெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…
-
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

கொழும்பு கொட்டாஞ்சேனை போதிராஜா மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார். இளைஞனுக்கும் அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
-
மனைவிக்கு நடந்தது என்ன? நாடகமாடிய கணவன்; காட்டிக்கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை

தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியில் படுக்கையில் இருக்கும்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனையில் கொலை என தெரியவந்துள்ளது. கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ சேவை அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த பெண்ணொருவர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஆவார். அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் நேற்று திங்கட்கிழமை (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மனைவி…