Tag: Npp

  • ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம்

    ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு  போராட்டம்

    மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தயில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.…

  • சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகளை அடக்குங்கள்; எம்.பி மனோகணேசன் ஆவேசம்

    சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகளை அடக்குங்கள்; எம்.பி மனோகணேசன் ஆவேசம்

    சட்டத்தை கையில் எடுத்து, மத தலங்களை அமைக்க அல்லது இடிக்க, எவருக்கும் உரிமை இல்லை. திருகோணமலையில் சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகள் தடுக்க பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். திருகோணமலை பதட்ட நிலை தொடர்பில், தற்போது இந்திய பயணத்தில் இருக்கும் மனோ கணேசன் எம்பி தனது எக்ஸ்-தள செய்தியில் கூறியுள்ளதாவது; ஒருங்கிணைந்த இலங்கையின் அடிப்படை, நமது நாட்டு இன, மத, மொழி பன்மைத்துவம் ஆகும். எந்த மத தலைவருக்கும்,…

  • பெளத்த மக்களுடனும் சாசனத்துடனும் விளையாட வேண்டாம்

    பெளத்த மக்களுடனும் சாசனத்துடனும் விளையாட வேண்டாம்

    பெளத்த மக்களுடனும் சாசனத்துடனும் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது. இந்த அரசாங்கத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான சிங்கள பெளத்த மக்களே வாக்களித்தார்கள். தாம் வாக்களித்த அரசாங்கமா இவ்வாறு செயற்படுகிறது என பெளத்த ர்கள் கவலைத் தெரிவிப்பதாக சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் விவகாரத்தில் அரசாங்கம் தனது தவறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சம்பவம் தொடர்பில் கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சரத் வீரசேகர தெரிவிக்கையில், இலங்கை பெரும்பான்மை…

  • பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமலின் பெயர்? வெளிவரப்போகும் உண்மைகள்!

    பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமலின் பெயர்? வெளிவரப்போகும் உண்மைகள்!

    நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்று பெக்கோ சமனின் தொலைபேசியில் உள்ளதாகவும் , விரைவில் உண்மை வெளிவருமெனவும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங் களை ஒழிப்பதற்கான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், போதைப்பொருள் உற்பத்தி மாவட்டமாக அம்பாந்தோட்டையை எதிர்த்தரப்பினர் மாற்றியமைத்துள்ளார்கள். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கைகளை…

  • இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு…. புகழும் பிரதி அமைச்சர்

    இஷாரா செவ்வந்தியின் ஆற்றல், அறிவு மற்றும் திறன் இந்த நாட்டைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்டிருந்தால், எவ்வளவு சிறந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப முடிந்திருக்கும் என்று வீடமைப்புத் துறை துணை அமைச்சர் டி.பி. சரத் கூறினார். குற்றத்திற்குப் பிறகு ஒரு பெண்ணாக அவர் எடுத்த பாதையை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, அவர் ஒரு அறிவுசார் திறன் கொண்ட நபர் என்பது தெளிவாகிறது என்று அவர் கூறினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனது ஆற்றல், அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும்…

  • முன்பிணை கோரும் கோத்தபாய புலனாய்வு அதிகாரி

    முன்பிணை கோரும் கோத்தபாய புலனாய்வு அதிகாரி

    ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோத்தபாய இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைதாகலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவர் முன்பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான கே.எஸ். மத்துமகே தாக்கல் செய்த முன்பிணை மனு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே…

  • மஹிந்தவுக்கு தூக்கு தண்டனை வேண்டும்; சரத் பொன்சேகா ஆவேசம்!

    மஹிந்தவுக்கு தூக்கு தண்டனை வேண்டும்; சரத் பொன்சேகா ஆவேசம்!

    நான் ஜனாதிபதியாகியிருந்தால் மஹிந்தவை கைது செய்து தூக்கிடுவேன் என முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் முன்னாள் இராணு வத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஊழல்களை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகிக்கின்றது. ஊழல், மோசடிகள் வரையறைகளைத் தகர்த்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் சிறைகளில் அடைத்தாலும் இவர்கள் ஊழல்களைக் கைவிட மாட்டார்கள். ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமை களை நீக்குவதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று முன்னாள் ஜனாதி…

  • அருச்சுனா எம்பியும் விரைவில் கம்பி எண்ணுவார்!

    அருச்சுனா எம்பியும் விரைவில் கம்பி எண்ணுவார்!

    கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லை என வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்தவர் இன்று 15 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாடளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தொடர்பில் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளனர். ஊழலை ஒழிக்க போகிறேன் என சாவகச்சேரியில் இருந்து…

  • ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அருச்சுனா

    ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வைத்தியம் பார்க்கும் அருச்சுனா

    அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த பெற்றோரும் தனது பிள்ளை ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதை விரும்பமாட்டார்கள். நாங்கள் பின்பற்றுவது இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாம் மதங்களாகும், இவற்றில் இதற்கு இடமில்லை. யாருக்காவது ஏதும் பிரச்சினை என்றால் வைத்திய முறையில் தீர்வை வழங்குவோம். நாட்டை வீணாக்க முடியாது. யாருடைய பிள்ளையும் நாசமாக விடமாட்டேன். இந்த நாட்டை…

  • எனது கடவுள் பிரபாகரன்; ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர்

    எனது கடவுள் பிரபாகரன்; ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர்

    எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுவதாவும் சிங்கள மக்கள் தமக்காக சேவையாற்றிய மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன்போது நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரபாகரன் எனது கடவுள் என்பதே எனது நிலைப்பாடாகும். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு…