-
யாழ் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. வைத்தியர் சுதர்சனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
மஹிந்த கட்சியின் முன்னாள் எ.பி லொகான் ரத்வத்த மரணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த (வயது 57) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
புலிகளின் குரல்’ வானொலி பிரபல அறிவிப்பாளர் சத்தியா மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர். புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள்…
-
யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார்

யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே குரு முதல்வர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு (01) இறையடி சேர்ந்தார். குரு முதல்வரின் புகழுடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச்செல்லப்படும் நிலையில் இன்று (02) மாலை 4 மணியளவில் சுவாமிகளின் இறுதி கிரியை நடைபெறவுள்ளது. அரை நூற்றாண்டு காலம் ஈழத்து சைவ சமயத்தின் தலைமகனாக விளங்கிய…
-
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாறினார் 88 வயதான பாப்பரசர், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் நித்திய இளைப்பாறியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்தார். நேற்று (20) வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு ஆராதனையிலும் அவர் பங்கேற்றிருந்தமை…
-
நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி

தமிழ் திரை உலகில் குணச்சித்திர நடிகராக இருந்த ரவிக்குமார் என்பவர் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். கேரளாவை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 70களில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். உல்லாச யாத்திரை என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழிலும் சில படங்கள் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு மலபார் போலீஸ். ரமணா. மாறன். விசில். சிவாஜி. வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணசத்திர நடிகராக நடித்துள்ளார். அது மட்டுமின்றி சில தொலைக்காட்சி…
-
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குனர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் மனோஜ். உதவி இயக்குனராக மணிரத்னத்திடம் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக வேண்டும் என சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஆனார். அப்பா பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள் போன்ற படங்களில் நாயகனாக…
-
மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி அஞ்சலி

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 92) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (26) இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.…
-
இலங்கையின் மூத்த பாடகர் பிரியா சூரியசேன காலமானார்!

இலங்கையின் மூத்த சிங்கள பாடகர் பிரியா சூரியசேன தனது 80வது வயதில் மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
-
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் உயிரிழப்பு

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று (03) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். நேத்ரன் தன்னோடு இணைந்து நடித்த நடிகை தீபாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய…