-
அந்த வெற்றிடத்தை நிரப்ப வாழ்நாள் முழுவதும் முயற்சிப்பேன்; ரத்தன் டாடா- ஷாந்தனு நாயுடு

தொழிலதிபரும், உலகமே புகழும் மாமனிதருமான ரத்தன் டாடா, தனது 86 வயதில், உடல்நலக் குறைவால் புதன்கிழமை இரவு காலமானார். அவரது மறைவுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்களது மனதால் இரங்கல் தெரிவித்து தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். ரத்தன் டாடா உடலுக்கு மரியாதை செலுத்த கட்சி பாகுபாடில்லாமல், அனைத்து அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ரத்தன் டாடாவின் மிகவும் நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்கு உரிய டாடா குழுமத்தின்…
-
ரத்தன் டாடாவின் உடலுக்கு அரச மரியாதை

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (Ratan Tata), உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டி முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
-
குமார் வெல்கம காலமானார்

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 74. இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
-
முன்னாள் அமைச்சர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ருக்மன் சேனாநாயக்க காலமானார். பொரளையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24) காலை அவர் காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி பிறந்த ருக்மன் சேனாநாயக்க அவர்கள் இறக்கும் போது அவருக்கு வயது 76. ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 1973 ஆம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான…
-
ஜனாதிபதி வேட்பாளர் ஐதுருஸ் இலியாஸ் திடீரென காலமானார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 79 வயதுடைய ஐதுருஸ் இலியாஸ் நேற்றிரவு காலமானார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். திடீரென சுகயீனமடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஹுனுபிட்டிய கங்காராமய விகாரையின் பிரதமகுரு காலமானார்!

கொழும்பு புதிய கோரளையின் பிரதம சங்க நாயக்கரும், கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் பிரதம அதிதியுமான வண. “பொடி ஹமுதுருவோ” என அழைக்கப்படும் கலபொட ஞானிஸ்ஸர தேரர் சற்று முன்னர் காலமானார். வண. கலபொட ஞானிஸ்ஸர தேரர் காலமான போது அவருக்கு வயது 81. தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
9வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்து விட்டார்; பா.அரியநேத்திரன்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச…
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலானது அவரது மெய்ப்பாதுகாவலரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார். இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
-
சம்பந்தர் மறைவுக்கு மோடி இரங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவார். இலங்கையின் தமிழ் தேசங்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கையை அவர்…