-
இஷாரா செவ்வந்திக்கு உதவியோர்; யாழில் பலர் கிடுக்கிப்பிடியில்

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினரே படகினை மீட்டுள்ளதாகவும் , படகின் வெளியிணைப்பு இயந்திரம் மீட்கப்படவில்லை எனவும், படகின் உரிமையாளரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை செவ்வந்தி தொடர்பிலான…
-
இலங்கையை உலுக்கிய கோர விபத்து; 15 பேர் பலி; சுற்றுலா சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24வது கிலோமீட்டர் தூண் அருகில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேருந்தில் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 34 பயணிகள் இருந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (04) இரவு 9 மணியளவில் எல்ல – வெல்லவாய வீதியில் 23வது மற்றும் 24வது கிலோமீட்டர் தூண்களுக்கு…
-
தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ள கோப்பாய் பொலிஸார் ; உரிமையாளர்கள் வீதியில்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி தங்கியுள்ளதுடன் , அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாக கோப்பாய் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1995ஆம் ஆண்டு காலம் முதல் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள 09 தனியார் வீடுகளையும் அதனுடன் கூடிய காணிகளுமாக 2.77 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி 30 வருடங்களுக்கு மேலாக கோப்பாய் பொலிஸார் தங்கியுள்ளனர். தமது காணிகளை விட்டு பொலிஸார் வெளியேற வேண்டும் என காணி உரிமையாளர்கள்…
-
செம்மணியில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூட்டு மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும்…
-
மட்டக்களப்பில் குடும்பமே சேர்ந்து கொள்ளை

மட்டக்களப்பு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிறு குழந்தைகளுடன் வந்து கொள்ளையிட்டுவரும் குடும்பம் தொடர்பில் தகவ்ல் வெளியாகியுள்ளது. இவர்கள் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சில சமயங்களில் கையும் களவுமாக அகப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
-
சென்னையில் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் உள்ளது. இந்த ராட்டினம் செங்குத்தாக மேலே சென்று கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று (27) மாலை 7 மணி அளவில் சுமார் 30 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த ராட்டினத்தில் ஏறி இருந்தனர். ராட்டினம் சுமார் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலேயே நின்று விட்டது. இதனால் 120 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள்…
-
தேர்ல்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத இலங்கை மக்கள்

2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும். அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை 50 வீத வாக்களிப்பு வீதம் இருக்கவில்லை. அதோடு வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில் மந்தகதியில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது. 12 மணிவரை வாக்களிப்பு வீதம் நுவரெலியா –…
-
30 வருடங்களுக்குப் பின் அச்சுவேலி நவகிரி சித்த வைத்தியசாலை காணி கையளிப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி சித்த வைத்தியசாலைக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியை 30 வருடங்களுக்குப் பின்னர் இராணுவத்தினர் மீளக் கையளித்துள்ளனர். குறித்த காணி, கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டது. சித்த வைத்தியசாலைக்குத் தேவையான மூலிகைகளைப் பயிரிடும் காணியாகக் குறித்த காணி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
யாழில் அதீத போதை பாவனையால் பறிபோன உயிர்

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம்செட்டியார் தோட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சுகந்தன் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை , உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-
யாழில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் குடும்பத்தினர் மீது கொலை வெறிதாக்குதல்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் (19) இன்று மாலை மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர், தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா பகுதியில் இருந்து வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்து தாக்குதல் நடத்திய கும்பல் வானத்திற்குள் வாள்களை மறைத்து…