-
சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை; மக்கள் நேற்று கவனயீர்ப்பு பேராட்டம்

சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பினை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 08 சந்தேக நபர்களின் பினையை ரத்து செய்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும். என மாத்தளை மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள மாத்தளை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட மகாவில்ல நாலந்த தோட்டம் மடவல்ல உல்பத்த பிரதேச மக்கள் நேற்று (09) கவனயீர்ப்பு பேராட்டம் ஒன்றை நடத்தினர் . இதன்போது பிரதேச மக்கள் சந்தேக…
-
யாழ்ப்பாணத்தில் கைபேசி அழைப்பால் 2 இலட்சம் ரூபாவை இழந்தார் வர்த்தகர்!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் “உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து வந்த கைதொலைபேசி அழைப்பால் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 2 இலட்சம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்துக்கு உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. மெகா அதிர்ஷ்டத்துக்கான காலக்கெடு முடிவடையவுள்ளது எனத் தெரிவித்து உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு கோரவே குறித்த வர்த்தகரும் தனது வங்கி இலக்கத்தைக் கூறியுள்ளார். அதன்…
-
யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி மரணம்

யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டிப் பகுதியில் உள்ள நகை செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மேற்படி நபர் நேற்று வேலைக்காகச் சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்குச் சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார். குறித்த விடயத்தைத் தாய்க்குத் தெரியப்படுத்திய மகன், தாயை…
-
சென்னை உணவுத் திருவிழாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னையில் மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழாவையொட்டி, மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவு திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தார். உணவு திருவிழாவை ஆர்வத்துடன் காணவும், ஆசையுடன் உணவு உண்டு மகிழவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கோவை…
-
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வருமா?

இலங்கைக்கு வந்த எண்ணெய்க் கப்பல் மீள திரும்பி சென்றுமை தொடர்பான செய்தி தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா , குறித்த எண்ணெய் தாங்கி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் தாங்கி அல்ல, அதனால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “யுனைடெட் பெட்ரோலியம்…
-
மன்னாரில் கர்ப்பிணி உயிரிழப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடுகிறது பொலிஸ்

மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள், பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் ,டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வைத்தியசாலையின் CCTV கெமராக்கள் மற்றும் போராட்டத்தின் போது…
-
வாக்காளர்களுக்கு வழங்கவிருந்த உலர் உணவு பொருட்கள் பறிமுதல்!

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் புதன்கிழமை (13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து வாகனம் ஒன்றை சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டது. இதன் போது…
-
யாழில் குழந்தையை பற்றைக்குள் வீசி பொலிஸார் அராஜகம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார் .அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் வீதியால் வந்துகொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு…
-
பல பிரதேசங்களுக்கு வௌ்ள அபாயம்

நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நில்வலா கங்கையின் ஒரு பகுதியில் சிறு அளவில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளது. இன்று (24) கணிசமான மழைவீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய தற்போது பாகொட, கொடபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்திரலிய,…
-
மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (14) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது. யாழில் கொட்டும் மழைக்கு மத்தியில் நனைந்தபடி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.