Tag: People

  • கொட்டித்தீர்த்த மழை; வெள்ளக்காடான அம்பாறை !

    கொட்டித்தீர்த்த மழை; வெள்ளக்காடான அம்பாறை !

    அம்பாறையில் பலத்த மழையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதோடு, சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய வானிலையினால் மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாவிதன்வெளி, கல்முனை முஸ்லீம் பிரிவு, தமிழ் உப பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதான போக்குவரத்து பாதைகள் சில வெள்ளக்காடாக காட்சி தருவதனால் தூர இடங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளதோடு உள்ளூர் வீதிகள் அனைத்திலும் நீர் நிரம்பி வழிகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முதல் இன்று திங்கட்கிழமை (14)…

  • யாழ்ப்பாணத்தில் அநுரவிற்கு பொங்கல்!

    யாழ்ப்பாணத்தில் அநுரவிற்கு பொங்கல்!

    புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பிவைப்பு

    இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல்; பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பிவைப்பு

    இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் நாளை(21) இடம்பெறவுள்ள பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை (21) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் வாக்கு பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் இடம்பெற இருக்கின்றது.…

  • கவனிப்பார் இன்றி கிடக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி!

    கவனிப்பார் இன்றி கிடக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி!

    மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால் அசுத்தம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் அடிகளார் ஈழத்தமிழர்களின் தமிழ் வளர்ச்சி பாதுகாப்பில் பெரும் பங்காற்றி தமிழுக்காக உயிர் நீத்தவர். அவரது தியாகம் உலகறியும் அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு தனிநாயகம் அடிகளாரின் நினைவு தூபி அமைக்கப்பட்டு…

  • யாழ் குறிகட்டுவானில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் அதிகாரி

    யாழ் குறிகட்டுவானில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் அதிகாரி

    மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (24) இரவு மது போதையில், குறிகட்டுவான் பகுதியில் கடமையில் இருந்திருந்தார். இதன்போது, வீதியால் சென்ற பொதுமகனிடம் இலஞ்சம் பெற முயன்றதோடு அவர்மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அந்தவகையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ஊர்காவற்துறை…

  • தவறான பாதையில் சென்றவர் உயிரிழப்பு

    தவறான பாதையில் சென்றவர் உயிரிழப்பு

    தெஹியோவிட்டவிலிருந்து கம்பளைக்கு வந்து அம்புலுவாவ மலையில் தவறான பாதையில் ஏறிச் சென்ற நபரொருவர் மீது பாரிய கல் விழுந்ததில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நான்கு பேர் கொண்ட குழுவொன்று மலை ஏற சென்றதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹியோவிட்ட முருத்தெட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே9 வயது 37) உயிரிழந்துள்ளார். மனைவியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர், நண்பர்கள் நான்கு பேருடன் இந்த சுற்றுலா வந்தது தெரியவந்துள்ளது.  

  • யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் அறிவிப்பு; காட்டிக்கொடுத்தால் சன்மானம்

    யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் அறிவிப்பு; காட்டிக்கொடுத்தால்  சன்மானம்

    யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் முகங்களை மறைத்து கறுப்பு துணிகளால் கட்டியவாறு துவிச்சக்கர வண்டிகளில் வந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய தகவல்களை தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், கொக்குவில், மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பங்களுடன் குறித்த கும்பல்களுக்கு தொடர்பு இருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த கும்பல் துவிச்சக்கர வண்டிகளில் வீதிகளில் முகங்களை…

  • யாழ் புன்னாலைக்கட்டுவனில் அழுகிய நிலையில் அதிபரின் சடலம்

    யாழ் புன்னாலைக்கட்டுவனில் அழுகிய நிலையில்  அதிபரின் சடலம்

    யாழ்ப்பாணத்தில் தனியாக வீட்டில் வசித்து வந்த ஓய்வு நிலை அதிபர் ஒருவர் புதன்கிழமை (31) அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் சுன்னகம் – மயிலங்காடு வீதி புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த வேலாயுதர் பாலசுப்பிரமணியம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மனைவியை பிரிந்து கடந்த 10 ஆண்டுகள் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து விட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் தமது…

  • யாழ் அரச உத்தியோகத்தர்களை கடைக்குள் வைத்துப்பூட்டிய உரிமையாளர்!

    யாழ்  அரச உத்தியோகத்தர்களை  கடைக்குள் வைத்துப்பூட்டிய உரிமையாளர்!

    யாழ்ப்பாணத்தில் மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று(01.07.2024) யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள மருந்தகமொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாடு நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் மருந்தகத்தின் அனுமதி தொடர்பாக மருந்தகமொன்றை சோதனையிட சென்றனர். சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கும் போது அதிகாரிகளை கடை உரிமையாளர் மருந்தகத்திற்குள் வைத்து பூட்டி அச்சுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட விசேட…

  • முகமாலையில் பல்கலைக்கழக மாணவியின் வீடு அடித்து உடைப்பு!

    முகமாலையில் பல்கலைக்கழக மாணவியின் வீடு அடித்து உடைப்பு!

    கிளிநொச்சி – முகமாலையில் இனந்தெரியாத நபர்களினால் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்மணி ஒருவரது வீடு அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது. பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட முகமாலை பகுதியில் வீடு ஒன்று அடித்து நொறுக்கப்பட்ட சேதமாக்கப்பட்டுள்ளன. வீட்டின் சில பகுதிகள் தீர்க்கிரை ஆக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் தாயும் மகளும் வாழ்ந்து வந்த நிலையில் மகள் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பதற்காக சென்றிருந்த நிலையில் தாயார் அருகில் உள்ள வீடு ஒன்றில் இரவுவேளைகளில்…